பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ፀ

பளிங்குக் கற்கள்மீது ஒயாது ஜலதரங்க நாதத்துடன் டிங் டிங் என விழுந்து, அதை வெண் மணலெனப் பொடித்து. குறும்புச் சிருர் போலச் சலசலத்தோடும் நீரோடையருகே, மரகதப் பாய் நடுவே பூத்த சிறு மலர், ஏதோ மஞ்சள் பூ என்று மட்டுமே தோற்றுமேயானல், இலக்கிய நயம் எதிரொலிக்காத இதயம் என்று கொள்ளலாம். எப்படியா யினும் சரி, படிப்பவர்களுக்குக் கிடைக்காத ஒர் அனுப வத்தை ஆசிரியர் எடுத்துத் தருகிருர் என்பதில் ஐய

நம் தென்னகத்தில் கல்கி அவர்கள் சீருடன் துவக் கிய சரித்திர இலக்கியப் பணி, இன்று பல ஒப்பற்ற மலர்களே அப்பாதையில் மலர வைத்திருக்கிறது.சரித் திர இலக்கிய ரசனை எந்த நாவலாசிரியரும் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு மக்களிடையே விரிந்திருக்கிறது. அண் மையில் பூத்தமலர் அன்பர் விக்கிரமன் அவர்களின் நந்தி புரத்து நாயகி. , . . .

மன்னர் சுந்தர சோழர் பெரும் புண்ணியம் செய்தவர். சுத்த வீரர்களான ஆதித்தன், அருண் மொழி, மாமேதை குந்தவ்வைக்கும் தந்தை. கதை ஆரம்பிக்கும்போது, சூழ்ச்சிக்குப் பலியாகி விடுகிரும் ஆதித்த கரிகாலர். நாட்டில் அரசுரிமைக்குப் போட்டி ஏற்படக் கூடாதென்று குந்தவ்வை, வெளி நாடு சென்று அனுபவம் பல பெற்றுவா என்று அருண்மொழி வர்மரை அனுப்பி வைக்கிருள். சுந்தர சோழரின் இளைய சகோதரர் உத்தம சோழர் மன்னராகிருர், சிற்றரசர்களும் பாண்டிய நாட்டுஆபத்துதவிகளும்அரசாங்கத்தைக் கவிழ்க்கத் திட்டம் தீட்டுகிருர்கள். காளாமுகர்கள், கபாலிகர்களின் நடமாட்ட மும் அதிகரிக்கிறது. இடையே, குந்தவ்வையின் அன்புக்குப் பாத்திரமான வாணகப்பாடிநாட்டுவந்தியத்தேவவல்லவரை யார், ஆதித்தரைக் கொன்ற குற்றத்திற்காக, அபாண்ட மாகப் பாதளச் சிறையில் தள்ளப்படுகிருர். மன்னர் உத்தம சோழரின் மகன் மதுரன் கண்டராதித்தன் சிவநேசச்