பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

செல்வியான தன் பாட்டியார் செம்பியன் மாதேவியாரோடு சிவதலங்களைத் தரிசித்துப் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு அரசியல் நினைவேயில்லாமல் வாழ்கிருன். இச் சூழ் நிலை அரசாங்கத்திற்கு எதிராகச் சதி செய்பவர்களுக்குச் சாதகமாகிறது. -- . :

வெளிநாடு சென்ற அருண் மொழி வர்மரின் வாழ்வில் கலையரசி இன்பவல்லி குறுக்கிடுகிருள் - சிறிது நேரமே. பத்தாண்டுகளுக்குப் பின் தாய்த்திரு நாட்டுக்கு அவர் திரும் பும் போது, பெற்ருேர் மறைவு, வந்தியத் தேவரின் சிறை வாசம், அரசாங்கத்தின் பலவீனம் -இவைகளே அறியும் போது திடுக்கிடுகிருர். மாறு வேடத்திலேயே நின்று, வேண்டுவன செய்து, சோழ நாட்டுப் பெருமையை மீண்டும் நிலை நிறுத்துகிருர், -

ஒரு வகையில், கல்கி அவர்களின் பொன்னியின் செல் வனின் தொடர்ச்சியாக இதைச் சொல்லலாம். ஆயினும் கல்கிஅவர்கள் படைத்த கற்பனைப் பாத்திரங்களை விக்கிரமன் இங்கு உலவ விடவில்லே. சரித்திரச் சான்றும் அனுமதியும் பெற்ற பாத்திரங்களே நந்திபுரத்து நாயகியின் சுவை குன்ருத ஆயிரத்திருநூறு பக்கங்களிலும் உலவுகின்றனர்.

சரித்திர இலக்கியம் உருவாக்குவது கடினம், நீள் கம் .பியின்மேல், கயிற்றின்மேல் நடப்பதற் கொப்பாகச் சொல் லலாம், புராணங்களில் மனிதனுக்கு அமானுஷ்ய சக்திகள் வாய்ந்திருந்தன. கல் பெண்ணுக உருமாறியது என்ருல், கண் இமைக்காமல் சு வார ஸ் ய. மா. க க் கேட்கிருேம். நீதி போதனை யொன்றையே குறிக்கோளாகக் கொண்ட அரிச்சந்திரன் கதையில், கதாபாத்திரங்களோடு நாம் ஒன்றி விடுகிருேம். இப்படியும் நடக்கக் கூடுமா என்று. விவாதிப்பதில்லை. கற்பரசி சாவித்திரி கால்நடையாகவே யமதேவனைப் பின் தொடர்ந்து, சாதுர்யமான பேச்சின. லேயே தர்மராஜனே வென்ருள் என்று கேட்கும்பொது அறிவுக்குப் புறம்பானது என்று நாம் தள்ளிவிடவில்லையே!