பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

as .

ஹாஸ்ய ரஸனையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவில் ஆருவது மாடியிலிருந்த, அம்மாஞ்சி சாஸ் திரிகள் தக்களியில் நூல் நூற்றராம், அந்த நூல் அறுந்து விடாமல் பூமிக்குக் கீழே செல்ல, அங்கேபள்ளம் பறிப்போமா என்று அருகிலிருந்தவர்கள் ஆலோசனை செய்தார்களாம் என்று படிக்கும்போது, முகவாயைத் துரக்கி பெரிதாக வாய்விட்டுச் சிரிக்கிருேமே அல்லாமல், இதெப்படியாகும் என்று முகத்தைக் கடுகடு வென்று வைத்துக் கொள்வதில்லையே! இப்பாத்திரங்கள் கற்பனைப் பட்ைப்புகள். குந்தவையும், வானதியும், மாதேவியும்

வளமிக்க சோழ நாட்டிலே, அரச குடும்பத்திலுதித்த கெளவரவம் வாய்ந்த பெண்கள். . * . .

தேவி குந்தவ்வை பல அரச தலைமுறையினரின் வாரிசு. மனது அகல பாயும் பருவத்தில், அதை அடக்கக் கற்றவர். சிறந்த அரசியல் மேதை. வந்தியத் தேவரோ-பெய ரிலேயே அவர் அருமை தெரிந்து விட்டதே. பிறரால் வந் தனை செய்யப்படும் தகுதி உடையவரன்ருே!

சரித்திர நாவல் எதையும், சீர்தூக்கிப் பார்க்குமுன், சரித்திரச் சான்றுள்ள பகுதி எம்மட்டு, அதல்லாத பகுதி எம்மட்டு என்று ஆராய்தல் வேண்டும். அடிப்படையான நாவலுக்குக் கருவூலமான சம்பவங்கள், பாத்திரங்கள், சரித் திர ஆதாரம் கொண்டவையாக இருந்தாலே போதுமானது. மற்றபடி நாவல் என்ற இலக்கிய வகைக் கேற்ப முக்கிய மல்லாத சம்பவங்களைச் சேர்ப்பதிலும். பாத்திரங்களைப் படைப்பதிலும், ஆசிரியர் கற்பனைத் திறன் முழுவதையும் பயன்படுத்தி யிருந்தாலும், பாதகமில்லை. நாவலின் மொத்த அழகு மேலும் சோபிக்க வகையுண்டு. சென்ற பத்தாண்டு களுக்குள் வெளிவந்த பல்வேறு சரித்திர இலக்கியங்களில் இக்கூற்று காணலாம்.

ஒரே ஒரு உதாரணம் சொல்ல விருப்பம். மகாகவி ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அமரத்வம் வாய்ந்தவை.