பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*I*

அவைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒதெல்லோ, நண்பன் என்ற பெயரில் ஒளிந்திருக்கும் கயவன் ஒருவனுடைய துர்ப்போதனையில்ை, அழகும் அன்பும் கொண்ட மனைவியைச் சந்தேகிக்கிருன், கதாநாயகன். அவள் உயிரிழந்த பின்னரே அவன் தெளிவடைகிரு:ன். இதுதான் கதை. சித்திர, விசித்திர சம்பவப் பின்னல்களும், சொற்கோலங்களும், தொய்வில்லாத வார்த்தையாடல் களும் சேர்ந்து, ஒதெல்லோவை எப்பேற்பட்ட மகோன்னத சிருஷ்டியாக்கிவிட்டன! சீதையை ராவணன் தூக்கிப் போனன். அனுமனுடன் கூடச்சென்று அடித்துப் பிடித்து ராமன் அவளை மீட்டு வந்தானென்ருல், ராமாயண மஹா காவியமே அன்ருட தினசரிப் பத்திரிகையில் நான்கே வரி களில் அடங்கிவிடுமே!! -

நந்திபுரத்து நாயகியில் இலக்கிய நயமும், சரித்திரம் தரும் சான்றும் சுவைபடப் பிணைந்திருக்கின்றன. ஆரம் , பமே கலகலப்பாக இருக்கிறது. தேவி குந்தவ்வையுடன் ராஜ மாதா கல்யாணி தேவி சொல்லும் கதையைக் கேட்க விழை கிருேம். குந்தவ்வையின் குணச்சித்திரம் வெளிப்பட ஆரம் பித்துவிட்டது. சோழ சாம்ராஜ்ய சேனதிபதி பார்த்தி பேந்திரன் உணர்ச்சியால் உந்தப்பட்டு, வரம்பு மீறிப் பேசி லுைம் உள்ளடக்கிய கோபமும், உதட்டிலே நெளியும் புன் னகையுமாக எதிராளியிடமிருந்து விஷயம் முற்றும் வெளிப் படக்கூடிய கேள்விகளைக் கேட்கிருள். (உள்நாட்டுக் குழப் பம் ஏதுமின்றி தாய்த் திருநாடு வளமிகு பாதையில் முன் னேற வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தைச் செயல் படுத்த, உயிரினுமினிய இளவலே, வெளிநாடுகளைச் சுற்றிவர ஊக்குகிருள். நாட்டை ஆளும் அரசர் ஒருவர் இருக்கும் போது, அவரிடம் செலுத்த வேண்டிய அன்பை நாட்டில் மற்ருெருவர் பங்கு பேர்ட்டுக் கொண்டால் சூழ்ச்சி யாளர்கள் எப்படியும் பயன்படுத்திக் கொள்வ்ர், என்று. மனத்திண்மையுடன் கூறுகிருள். யாரிடம் சொந்த மகனப்போல் வளர்த்த தம்பியிடம் சொல்கிருள். வ்ெளி