பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

நாட்டுப் பயணம் இளவலுக்குச் சுவையுள்ளதாக அமைய வேண்டும். அதே சமயம் நாட்டுப் பொருளாதாரம் பெருக வழியும் ஏற்பட வேண்டும் என்று எங்கெங்கு போக வேண்டுமெனத் திட்டம் தீட்டுகிருள், அரசியல் தீர்க்கதரிசி குந்தவ்வை:

எத்தகைய இடர் வரினும் அஞ்சா நெஞ்சமும், உணர்ச்சிப் பிழம்பாக மாறினுலும் எளிதில் வெளிக்காட் டாத திண்மையும், சிரிப்பும், நகைப்பும், முறுவலும் தானே வேதனையைத் தீர்க்கும் மருந்து: இப் பிரபஞ்சத்தை சரிவர நடத்த வேண்டிய பெரும் கடமை கொண்டுள்ள குஞ்சிதயாதன் முகத்தைப் பாரேன், குமிழ்ச்சிரிப்பு அரும்பி நிற்கவில்லையா? என்று வாழ்க்கை முழுதும் இன்முகம் காட்டியே நடத்துகிருள். குந்தவையின் அரசியல் மேதைக்கு எல்லோரும் மதிப்புக் கொடுக்கின்றனர். சிறிய தந்தை பட்டமேற்க, இளவல் அயல்நாடு போகவேண்டுமென்று அவள் தீட்டிய திட்டத்தை யாரும் ஆக்ஷேபிக்கவில்லை. காஞ்சி மாளிகையிலிருந்து தஞ்சைக்குப் போகவேண்டுமா, இடையில் பாதை மாறி குடந்தை வழி போக வேண்டுமா, வந்ததும் வராததுமாக பழவூர் செல்ல வேண்டுமா, எது வாயினும் உடனுக்குடனே ராஜமாதா கல்யாணி தேவி, செம்பியன் மாதேவி முதற்கொண்டு அக்கணமே நிறை வேற்றுகின்றனர். குந்தவ்வை எது செய்தாலும் அது சரியே. என்ற நம்பிக்கை யாவரிடமும் நிலவியது. நந்தி புரத்து நாயகியின் இருபாகங்களிலும் இந்த குணசித் திரம் மாருது நிற்கிறது. குத்தவ்வையோடு ஏதாவது ஒரு வகையில், சிறிது நேரமே தொடர்பு கொண்ட சிறிய பாத்திரமும் அவளுடைய அன்பிலே ஒன்றி விடு கின்றது. (மாணிக்கம், சுமதி, இன்பவல்லி, இளைய பஞ்சவன் மாதேவி, வானதி யாவரும் இளையபிராட்டியின் அன்பிலே திளைக்கின்றனர். இனைய பிராட்டியின் அன்பு எனக்குத் தாயின் அன்பை நினைவு படுத்தியது. என்ருள். வானதி, அக்காவின் அன்புக்கு ஈடு இனேயே கிடையாது',