பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5&

வாலிபனல் காதலிக்கப்படும் ஊர்மிளாவும் திருமணமான வள். வயதில் முதிர்ந்த காத்தவராயனின் மனைவி. இவள் வீரசேகரனேக் காதலிக்கிருள். மணமானவன் காதலிப்பது புதியதன்று. ஆனல் மணமான ஒருத்தி இன்ைெருவனேக் காதலிப்பது சரித்திர நாவல்களில் காணுத ஒன்று. இப்படிப் பட்ட காதலைக் காட்டிய ஆசிரியர், காதலரை வாழவிடாமல் இறக்கச் செய்துள்ளமையும் குறிக்கத் தக்கதாகும். -

சுவைமிக்க இந்த நாவலில் பல உவமைகளும் வருண னைச் சொற்ருெடர்களும் திரும்பத் திரும்ப வருகின்றன. ஆயிரத்து நானூற்றுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நாவலில் இதைப் பெரிதுபடுத்திக் கூறமுடியாதுதான், ஆனல், ஜனநாதனின் லட்சியம் இருமுறை வருவது சற்று நம் பொறுமையைச் சோதிக்கிறது. சோழ சாம்ராஜ்யத்தை ஏன் அழிக்க அவன் விரும்புகிருன் என்பதை ஜனநாதன் முத வில் வீரசேகரனிடம் கூறுகிருன். குலோத்துங்கன் காலத்து அரசியல் நிலை, மொழியின் வளர்ச்சி, சமயத்தின் ஆதிக்கம். ஜாதி வேற்றுமையின் நுழைவு முதலிய பலவற்றை இப்பகுதி யில் ஆசிரியர் தெளிவாகவும் சுவையாகவும் கூறுகிருர். ஆனால், இதே பேருரையை ஜனநாதன் வீரபாண்டியனிட மும் நிகழ்த்துகிருன் கதையில் அதைக் கேட்போர் வேறு வேறு மனிதர்தாம். ஆனல், படிப்பவர் ஒருவர்தானே? எனவே இது இரண்டாம் முறை வரும்போது அலுப்புத் தட்டுகிறது. இரண்டும் ஒரே பாகத்தில் அதுவும், அதன் பிற்பகுதியிலேயே அமைந்திருப்பதையாவது தவிர்த்திருக் கலாம் என்று தோன்றுகிறது. ‘. . . .. . நாவல் சுவைமிக்கதாயினும், சுவை பாகத்துக்குப் பாகம் மாறுபடுகிறது. வீரபாண்டியன் மனைவி நாவலின் முதல் பாகம் முழுச்சுவை நிறைந்தது என்ருல், இரண்டாம் பாகம் முக்கால் சுவையுடையது; மூன்ரும் பாகம் கால்சுவையுடை யது. சுருங்கக் கூறின் இந்த நாவல் சென்று தேய்ந்து இறு தல் என்னும் குறையுடையது. மூன்ரும் பாகத்தின் சுவை, அதன் முதல் பாகத்துடன் ஒப்பிடும்போதுதான் குறைந்து