பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ö9

நிற்கிறதே தவிர, பிற நாவல்களுடன் ஒப்பிடும்போது அதுவே நிறைந்து சிறக்கிறது.

வீரபாண்டியனின் தோல்வியுடன் கதை முடிகிறது. அங்கேயே ஜனநாதனின் வெற்றி ஆரம்பமாகிறது. ஜன நாதனின் பிற்கால வரலாறு, இன்றும் சுவை நிறைந்தது என்பதைச் சரித்திரம் கற்ருேர் அறிவர். அவன் சோழனின் மகளை மணம் செய்து கொள்வதையும், பிறகு வரும் சோழ மன்னனை எதிர்த்து அவனைச் சிறை செய்வதையும் சரித்திரம் கூறுகிறது. அந்தப் பகுதியை ஆசிரியர், இந்நாவலின் தொடர்ச்சியாக எழுதினால் தமிழர் பயன் பெறுவர்.

இன்று ஏறத்தாழ எல்லா எழுத்தாளரும் சரித்திர நாவல்களை எழுதுகின்றனர், அல்லது எழுத விரும்புகின்றனர். ஏராளமான சரித்திர நாவல்கள் வெளிவந்துள்ளன. நின்று நிலைக்கும் வன்மை பெற்றவை ஒரு சிலவே. அத்தகைய சிறந்த சரித்திர நாவல்களுள், வீரபாண்டியன் மனைவியும் ஒன்று. இந்நாவல் மூலம் அரு. இராமநாதன் சிறந்த சரித் திர நாவலாசிரியர்களுள் ஒருவராகி விட்டார். இவர் நாவ லேப் படித்துச் சுவைத்துப் பாராட்டும் ரசிகர்களுக்கு இவர் செய்யக்கூடிய கைமாறு ஒன்று உண்டு. அது, வீரபாண். டியன் மனைவி யைப் போல இன்னும் சில அரிய, புதுமை மிக்க சரித்திர நாவல்களைப் படைத்தளிப்பதுதான்.