பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம்நாள் தலைமை உரை

மீ.ப. சோமசுந்தரம்

இன்று இந்தக் கருத்தரங்கில் ஐந்து நண்பர்கள் ஐந்து நவீனங்களை ஆராய்கிரு.ர்கள். ஆருவது ஆசாமியாக, நானும் இந்த ஐந்து நவீனங்களையும் பற்றி ஐந்து குட்டிச் சொற்பொழிவுகள் செய்வது அவசியம் இல்லை என்று கருது கிறேன்! - - -

தமிழ் எழுத்தாளர் சங்கம் இதுபோன்ற கருத்தரங்கு களை அடிக்கடி ஏற்பாடு செய்யவேண்டும் என்பது என் விருப் பம். இந்த அரங்கிலே நடப்பதுபோல ஒர் அறிஞர் ஒரு நவீ னத்தை எடுத்து ஆராய்ந்து மதிப்புரை வழங்குவதுபோல, ஒரு சில அறிஞர்கள் ஒரே நூலைப் பல கோணங்களிலிருந்து ஆராயும் முறையிலும் ஏற்பாடு செய்யலாம். அதோடு, ஒரே ஆசிரியரின் பல நவீனங்களையும் பல அறிஞர்கள் ஆராய்ந்து கருத்துக்கள் வழங்கலாம். இப்படி யெல்லாம் இலக்கிய ஆராய்ச்சிகள் நடத்தில்ை, இலக்கியம் வளர்வதற் குரிய ஆரோக்கியமான சூழ்நிலை உருவாக இடமுண்டு.

பொதுவாக, நம் காலத்தில் வாழ்ந்து வருகிற, நம் மோடு பழகுகிற, ஒர் ஆசிரியரின் எழுத்தை ஆராய்வதில் பல சிக்கல்கள் உண்டு. ஆராய்கிற அறிஞருக்கும் சிக்கல்கள்: