பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

●及

ஆராய்ச்சிக்கு உள்ளாகிற ஆசிரியருக்கும் சிக்கல்கள்! ஆல்ை இந்தச் சிக்கல்களைக் கண்டு நாம் மனம் கூசவேண்டிய தில்லை.

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் இலக்கியத்தை ஆராய்வது யாருக்குமே கடினந்தான். மறைந்த ஆசிரியரின் எழுத்தானலும் சரி; உயிரோடு இருக் கிற ஆசிரியரின் எழுத்தானலும் சரி; விமரிசகன் தனது கோணல்களையும், வெறித்தனங்களையும் தனிப்பட்ட நட்பு அல்லது பகைமை உணர்ச்சிகளையும் முற்றிலும் மறந்து அல் லது துறந்து, ஒரு நூலை ஆராய்வது என்பது ஒருவகையான யோக சாதனே! அந்த யோக சாதனை கைவந்தவர்கள் எந்த நாட்டிலும் எந்த மொழியிலுமே அபூர்வம்! ஆகையால் எழுதுகிறவன் விமரிசகனை மறந்துவிட்டுத் தனது கடமை யைச் செய்துகொண்டே போகவேண்டும்! எழுதுவது என்பது அவனுடைய கர்ம யோகம். அதுபோல மதிப் புரை செய்வது என்பது விமரிசகனுடைய கர்ம யோகம்! அவரவர் தம் தம் கடமையைச் செய்துகொண்டே போல்ை, காலம்' என்னும் மாபெரும் விமரிசகன் எல்லா எழுத்துக் களையும் சேர்த்து காய்தல் உவத்தல்' இல்லாமல் தானே மதிப்பிடுவான்! பேணுவில் மையை அடைக்கும்போதே விமரிசகனை முன்னே நிறுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டால், ஆபத்துத்தான்! அதிலும் சில விமரிசகர் களே மனக்கண் முன்னல் நிறுத்திவிட்டால், எண்ணங்கள் அப்படியே அமுங்கிப் போய்விடும்! சில திருஷ்டி வேகங்கள் *Lilliq ~ -

தமிழ் எழுத்தாளர்கள் எல்லாரும் இதயம் கலந்த உற வோடு ஒருவர் எழுதியதை மற்றவர் படித்துப் பார்ப்பது என்னும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், விமரிசனக் கலை வளர்வதோடு இலக்கியமும் வளரும். இந்த இரண்டுக் கும் மேலாக எழுத்தாளர்களின் உறவும் வளரும். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் இலட்சியங்களில் ஒன்று நல்ல முறை யில் நிறைவேறியதாகும்! -