பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவனின் மிஸ்டர் வேதாந்தம்

ராஜேஸ்வரி நடராஜன்

தமிழ் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கியவர் திரு. தேவன். அவருடைய அரிய படைப்புக் களிலே ஒன்றுதான் மிஸ்டர் வேதாந்தம். தேவனுடைய நாவல்களிலே சிறந்த இரண்டு நாவல்களைத் தேர்ந்தெடுக்கச் சொன்னல், முதலில் லட்சுமி கடாட்சத்தை'யும், அடுத்து "மிஸ்டர் வேதாந்த'த்தையும்தான் தேர்ந்தெடுப்பேன் நான். நண்பர் ஒருவர் சொன்னர்: ‘'தேவனுடைய ஜஸ்டிஸ் ஜகந் நாதன் பிரமாதமாயிருக்குமே" என்பதாக இருக்கலாம். ருசியில் வேறுபாடு இருப்பது இயற்கைதானே? ‘. . .

மிஸ்டர் வேதாந்தம் ஏறத்தாழ பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆனந்த விகடனிலே வாராவாரம் தொடர்ந்து வெளியான நாவல் என்பது பலருக்கு நினை விருக்கலாம். அவ்வப்போது அவற்றைப் பிரித்தெடுத்து, தொகுத்துப் புத்தகமாக்கி வைத்திருந்தால்தான் உண்டு. இன்று புத்தகக் கடையிலே காசு கொடுத்து மிஸ்டர் வேதாந் தத்தை விலைக்கு வாங்கிவிட முடியாது! மிஸ்டர் வேதாந் தம் என்ன, தேவனுடைய படைப்புக்களில் எதுவுமே நூல் வடிவில் இதுவரை வெளிவரவில்லை. அது பெரிய சோகக்