பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夺4

கதை-என்று விஷயம் தெரிந்த வட்டாரத்தில் கூறலாம். எப்படியிருந்த போதிலும் அது பெரும் குறைதான். அந்தக் குறை நீங்கவேண்டும். தேவனுடைய நாவல்களிலே நாம் பெற்ற இன்பத்தை வழிவழியாக நமது குழந்தைகளும் பெற வேண்டும். அதற்கு எழுத்தாளர் சங்கம் முயற்சி செய்வது மிக மிக அவசியம்.

இனி விஷயத்துக்கு வரலாம்.

மிஸ்டர் வேதாந்தம் என்ற நாவல் ஒரு நல்ல தமிழ் நாட்டுக் கதை. தஞ்சை ஜில்லாவிலே, தூத்துக்குடி கிராமத் திலே பிறந்து வளர்ந்த வேதாந்தம் என்ற இளைஞன்தான் கதாநாயகன். அவன் அத்தை மகள் செல்லம்தான் கதா நாயகி. இவர்கள் இருவரையும் சுற்றியே கதை பின்னிப் படர்கிறது. கதை அம்சம் என்று எடுத்துக்கொண்டோ மால்ை அது மிஸ்டர் வேதாந்தத்திலே குறைவுதான். வேதாந்தம் ஓர் அப்பாவி இளைஞன். கஷ்டம் என்பதே இன்னதென்று தெரியாமல், செல்லப் பிள்ளையாய் வளர்ந்த வனே தந்தையின் ஊதாரித்தனமும். ஆடம்பரமும் கடனளி யாக்கி விடுகின்றன. தந்தையையும் இழந்து, உறவினரின் நயவஞ்சகத்தால் சொத்துக்களையும் இழந்து மனம் ஒடிந்து வேதாந்தம் தவிக்கும் நிலையில், அத்தையும் அத்தை பெண் செல்லமும்தான் ஆதரவாக இருக்கிருர்கள். எப்படியாவது சுயமாக உழைத்துப் பிழைத்து முன்னேறி, அதன்பின் செல்லத்தை மணப்ப்து என்ற திட சங்கற்பத்துடன் சென் இனக்கு ரயிலேறுகிருன், வேதாந்தம். சென்னையிலோ, அந்த அப்பாவிக்கு மேலும் வேதனை தரும் பலதரப்பட்ட அனுப வங்கள் காத்திருக்கின்றன. எத்தனை எத்தனையோ இன்னல் களுக்கிடையிலும் எழுத்தாளஞக வேண்டும் என்ற ஆர்வ மும் ஊக்கமும் குறையவே இல்லை. துன்பத்தால் அவன் தளர்கின்ற போதெல்லாம் ஸ்வாமி என்ற நண்பர் ஒருவர் வலிய வந்து அவ்வப்போது அவனைக் கவனித்துக் கொள் கிருர் அவருடைய உதவியால் வேதாந்தம் முடிவில்,