பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

வெற்றி வீரனாக, பத்திரிகை ஆசிரியனாகப் பொறுப்பேற்று, செல்லத்தின் கரம் பற்றுகிருன்.

இதுதான் கதை.

எளிய கதைதான் என்ருலும், இனிமையும் உருக்கமும் நிறைந்து உள்ளத்தைத் தொடும் கதை. கதை என்று சொல்வதைக் காட்டிலும், வேதாந்தத்துக்கு ஏற்படும் அனுபவங்களின் கோர்வை என்ருலும் இன்னும் பொருத்த மாக இருக்கும். கிராமீயச் சூழ்நிலை, நாகரிகம் மிகுந்த சென்னையில் தகிடுதத்தங்கள், மனிதர்களின் விசித்திரமான மனோபாவங்கள்-பற்றிச் சுவைபடக் கூறுகிருர் நாவலாசி ரியர். இந்த நாவலிலே வருகின்ற பத்திரிகை ஆசிரியர் ஒருவர் வேதாந்தத்துக்கு அறிவுரை கூறுகின்ருர், நீங்கள் எழுதுகின்ற கதை தமிழ் நாட்டுக் கதையாக இருக்க வேண்டும். கதைப் பாத்திரங்களைப் பார்க்கும்போது எங்கேயோ பார்த்திருக்கிருேமே என்று பிரமை தட்ட வேண்டும்’-என்று. மிஸ்டர் வேதாந்தம் நல்ல தமிழ் நாட்டுக் கதை மட்டுமல்ல, நமது தமிழ்ப் பண்பாட்டை அழகாக விளக்கும் கதையும்கூட. கதையில் நடமாடுகின்ற பா த் தி ரங் க ள் ஒவ்வொன்றையும் பார்க்கின்றபோது எங்கேயோ பார்த்திருக்கிருேமே என்ற பிரமையும் அடிக்கடி ஏற்படுவதுண்டு ! - o

கதையிலே எத்தனையோ பாத்திரங்கள். கதாநாயகளுக வரும் வேதாந்தம் ஆரம்பம் முதல் கடைசி வரை உலகத்தின் சூது வாது புரியாத அப்பாவிப் பையனாகவே சித்தரிக்கப் படுகிருன். புத்தகத்தைப் படித்து முடித்து கீழே வைத்த பின்னரும்கூட அந்த அப்பாவி, தன் கட்டுக் குடுமியுடன் நம் கண்முன் நின்றுகொண்டே இருக்கிருன். சந்தானம் ஐயங்கார் என்பவர் வீட்டுக் குழந்தைகளுக்கு ட்யூஷன் மாஸ்டராகப் போய், அவர்களிடமே இவன் பாடம் கற்றுக் கொள்ளும்படியாகி விடுகிறது! கல்கத்தா சர்மாதான் என்ன. இந்த அப்பாவி வேதாந்தத்தை என்ன ஆட்டம்