பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66,

ஆட்டுவிக்கிருர். அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று விடுபட்டு சென்னைக்கே வந்து விடுகிருன். சென்னை யிலும் வெங்கட், ராம் என்ற பித்தலாட்டக்காரர்களின் கையிலே சிக்கி, அவர்கள் வாய்ச் சவுடாலிலே மயங்கி கையிலிருந்த பணத்தையும் அல்லவா கோட்டை விட்டுவிடு கிருன். இப்படி அடிமேல் அடியாக விழுந்து அவன் தவிக் கின்ற தவிப்பு! இவையெல்லாம் அந்தப் பாத்திரத்தின்பால் நமக்கு அன்பையும் அனுதாபத்தையும் ஏற்படுத்தி விடு கிறது. இந்த அம்மாஞ்சிக்கு வாய்த்த அத்தங்காள் செல்லம் இருக்கிருளே, அழகிலே ரதிதான். ஆசிரியர் எடுத்த எடுப் பிலே வர்ணிக்கிருர் அவளை. கழுத்தில் ஒரே வடம் சங்கிலி. கையில் ஒரேயொரு ஜோடி வளை. காதில் சின்னஞ்சிறிய வெள்ளைத் தோடு. உடுத்தியிருந்தது சாதாரண சீட்டிச் சித்தாடை. என்ருலும் கொழு கொழு வென்று கரும் பட்டென வளர்ந்த நீண்ட கேசமும், தளதளவென்று உருட்சியுடன் விளங்கிய அங்கங்களும், அந்த ஸ்ந்தான ரங் காச்சாரியாரின் குடும்பத்துக்கே உரித்தான எடுப்பான நாசி யும், எல்லாவற்றிற்கும் மேலாக ஸ்திரீ ஜாதிக்கே இயற்கை யாக வந்துவிடும் தளுக்கும் குலுக்கும் அவளை ஒரு ரதியாகத் தோன்றச் செய்ததென்பது சாதாரணமாக எதிர்பார்க்க வேண்டிய ஒரு முடிவுதான்-’. இந்த ரதியிடத்திலே அம்மாஞ்சி மயங்கியதிலே வியப்பென்ன இருக்கிறது? இந்தச் செல்லத்துக்கும்தான் அம்மாஞ்சியிடத்திலே எவ்வளவு அன்பு, நம்பிக்கை. அவள் வழிபடுகின்ற ஆஞ்சநேய மூர்த்தி யிடத்திலேதான் எத்தனை ஆழமான பக்தி. அவளது அன்பும், பக்தியுமே வேதாந்தத்துக்கு பக்கபலமாக அமைகின்றனவே! அன்பும் அமைதியும் நிறைந்த அழகியாக நம் நினைவிலே நிலைக்கிருள் செல்லம். - -

கதா நாயகனுக்கும், கதாநாயகிக்கும் அடுத்தபடியாகக் கதையிலே நம் கவனத்தைக் கவருகிறவர் ஸ்வாமி என்ற பாத்திரம். லேசுப்பட்ட பாத்திரமா அது! கதாநாயகன், கதாநாயகி இருவர் மீதும் ஆதிக்கம் செலுத்தும் பாத்திர