பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

மல்லவா? அவ்வப்போது வேதாந்தம் அவதிப்படும் போதெல் லாம் ஆபத்பாந்தவராகத் தோன்றி, அவனுக்குத் தேவை யான உற்சாகத்தை வாரி வழங்குகிருர். அளவுக்கு மீறிய சோதனைகள் அடுத்தடுத்து வந்து வேதாந்தத்தை அலைக் கழிக்கும்போது, நமக்கு ஐயோ, பாவம்!-என்றிருக்கிறது. நாம் அப்படியே அனுதாபத்தில் மூழ்கி விடாதபடி ஸ்வாமி ஆஜராகி நகைச் சுவையாக எதையாவது சொல்லி, சூழ் நிலையின் இறுக்கத்தைத் தளர்த்தி, கதையையும் சகஜ நிலைக்குக் கொண்டு வந்து விடுகிருர். ஸ்வாமி வருகிற இட மெல்லாம் கதையிலே கலகலப்புத்தான். அவரது முரட்டுத் தனமான பேச்சும், அடாவடியும் கதை முடியும் வரை காதில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அவருக்கும் அவரது மனைவி பூமாவுக்கும் இடையே ஒரு ரஸமான சம்வாதம். வஸந்தா என்ற பெண்ணையும், அவள் தந்தையையும் பூமா வுக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அதைச் சுட்டிக் காட்டு கிருர் ஸ்வாமி.

ஸ்வாமி:- உனக்கு அவர்களைக் கண்டாலே துவேஷம். அப்படித்தான் பேசுவாய்.

பூமா.:- அப்படியானல் உங்கள் மாதிரி நானும் நான் லென்ஸ் என்றுதான் பதில் சொல்லவேண்டும்.

ஸ்வாமி:- நான்ஸென்ஸ். பூமா. செல்லம் இருக்கிருளே, ரொம்பப் புத்திசாலி, ஸ்வாமி:- நீ புத்திசாலி என்ருல், அதற்கு அர்த்தமே இல்லை, போ. х

பூமா.:- நான் உங்களைச் சிலாகித்துக் கொள்கிறபோ தெல்லாம் சந்தோஷப்படுவீர்களே, அதற்கென்ன அர்த்தம்?

ஸ்வாமி:- "கெட் அவுட்" - நான்ஸென்ஸும், கெட் அவுட்டும் இந்த மனிதர் டத்திலே அகப்பட்டுக் கொண்டு படுகிறபாடு கோபிக்கி முரா, இல்லை குணமாய்ப் பேசுகிருரா என்றே தெரியாமல்