பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎8

போய்விடுவதுமுண்டு. இன்னெரு சந்தர்ப்பத்திலே பேசு கிருர், பேசாதே பூமா இந்த வேதாந்தத்தை நான் மன்னிக்கவே மாட்டேன். நான்பாட்டுக்கு இந்த வஸ்ந்தா கல்யாணத்தை நடத்தியிருந்தால், அத்தைக் கிழவி மண்ணே வாரி இறைப்பாள். இந்தப் பெண் செல்லம் குடம் குட மாகக் கண்ணிரைக் கொட்டும், என் கதி என்ன. ஒரே சேறும் சகதியுமாய்ப் போகுமே.”*

பூமா சிரிக்கிருளோ, இல்லையோ, நாம் சிரித்தே விடு கிருேம். ஸ்வாமியின் இளகிய மனதையும், அதை ஒரு பொய்ப் போர்வையால் போர்த்தி உலகத்தை வேறு வித மாக எண்ணும்படிச் செய்யும் பண்பையும் அழகாகச் சித்தரித்து, ஸ்வாமி என்ற குண சித்திரத்தை வாசகர்கள் என்றென்றும் மறக்க முடியாதபடி செய்துவிடுகிருர் ஆசிரியர் தேவன். ஸ்வாமியின் பாத்திரம் அபூர்வமான பாத்திரம் மட்டுமல்ல, அற்புதமான பாத்திரமும்கூட. ஸ்வாமியைப் போலவே சிங்கம் என்று இன்னெரு பாத்திரம். ஸ்வாமிக்குத் தம்பிதான். ஸ்வாமி அளவு நமது கவனத்தைக் கவரா விட் டாலும், ஸ்வாமியின் அடாவடிக்குப்பதிலடி கொடுப்பதிலும் கதைக்குக் கலகலப் பூட்டுவதிலும் சோடை போகவில்லை என்றே சொல்லலாம். ஸ்வாமியையும் சிங்கத்தையும் போல் உதவக் கூடியவர்கள் இருந்து விட்டால், வேதாந்தம் மட்டு மென்ன, யார் வேண்டுமானலும் முன்னேறி விடலாம்!

இதுவரை குறிப்பிட்ட முக்கிய பாத்திரங்களைத் தவிர கதையில் இன்னும் எத்தனை எத்தனையோ பாத்திரங்கள். ஒவ்வொன்றும் தனித் தன்மையோடு இயங்குவதையும் பார்க்கிருேம், வைரம் கோபாலஸ்வாமி, ரங்கநாதம்இவர்கள் மிகைபடக்கூறப்பட்ட பாத்திரங்களாகத் தோன்றி இலும் நம்ப முடியாத பாத்திரங்களாகத் தோன்றவில்லை. கதையிலே ஒவ்வொரு பாத்திரமுமே அததற்குரிய பண் போடும் தனித் தன்மையோடும், வரம்போடும்-சிருஷ்டிக் கப்பட்டிருப்பதே நாவலின் வெற்றிக்கு பெருமளவில் உதவி

செய்கிறது என்று கூடச் சொல்லலாம்.