பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ó Ø

கதை இளம் எழுத்தாளனைப் பற்றியதாகையால் ஆசிரியர் தேவன் அங்கங்கே பொருத்தமாக, தம்முடைய அனுபவத்திலிருந்து சில மணியான உரைகளைத் தரவும் மறக்கவில்லே-பத்திரிகைத் தொழிலைப் பற்றிப் பேசுகிரு.ர். ரொம்பச் சிரமமான தொழில் இது. என்றைக்கும் தொந்தரை. நேற்றைக்கு நன்ருக எழுதியிருந்தேனே என்பதற்காக இன்றைக்கு உம்மை யாரும் விரும்பிப் படிக்க மாட்டார்கள். அன்ருடம் பேர் சொல்ல வேண்டும்......... எழுத்தாளன் எழுதிக் கொண்டே இருக்கவேண்டும். பேைைவச் சற்று ஒதுப்புறமாக வைத்து ஓய்வு கொடுத்து விட்டால் அப்புறம் அதன் அருகில் கையைக் கொண்டு போவது சிரமம். பேனுவும் கனக்கும், அதைக் காகிதத்தில் ஒட்டுவது தேர் இழுக்கிற மாதிரி இருக்கும். படிக்கிற பேருக்கும் உலுக்கு மரம் போடுகிற மாதிரி தோன்றும். பேணு ஒடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் எழுத்தாளனுக்கும் எளிது. வாசகருக்கும் சுகம்.”

நாவல் முழுவதும் தேவனுடைய பேணு ஒடிக்கொண்டே யிருக்கிறது வெகு லாகவமாக வாசகர்களும் சுகமாக அனுபவித்துக் கொண்டே இருக்கிருர்கள். புத்தகத்தைப் படித்து முடித்த பின்னரும் அலுப்பே தெரிவதில்லே. சிங்கம் வேதாந்தத்தின் கட்டுரை யொன்றைப் படித்து விட்டுச் சொல்கிருர், எத்தனை பக்கங்கள் படித்திருக்கிறேன்ஆனல் அவ்வளவு படித்த மாதிரி ஒரு சோர்வு வரவில்லையே. ஜிலு ஜிலு வென்று இளநீர் ஐயா இளநீர். ஒட்டம் ஒட்ட மாகவல்லவா ஒடுகிறது! இந்த வார்த்தைகள் இந்த நாவ லுக்கும் மிக அருமையாகப் பொருந்துகிறது.

தேவனுடைய பாத்திரங்களிடத்திலே நாம் சிறப்பாகக் காணக்கூடியது பக்தி அம்சம். தேவனே நல்ல முருக பக்தர், ஆகவே அவரது பாத்திரங்களையும் அந்தப் பக்தி உணர்வு உடையவர்களாகவே படைத்துவிடுகிருர். அந்த உணர்வு வாசகர்களை வசீகரித்து பரவசமூட்டத் தவறுவதுமில்லை. மிஸ்டர் வேதாந்தமும் அந்த விதிக்கு விலக்கல்ல-ஆஞ்சநேய