பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர். சண்முகசுந்தரத்தின் நா கம் மா ள்

தி க. சிவசங்கரன்

ஆர். ஷண்முக சுந்தரத்தின் நாகம்மாள் பிரபல மான சமூக நாவல் அல்ல! ஆனால், மிகுந்த இலக்கிய நய முள்ள நாவல்; சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஒரு மணிக் கொடி எழுத்தாளரின் படைப்பு.

27 அத்தியாயங்களும், 124 பக்கங்களுமுள்ள நாகம் மாள்' ஒரு தத்ரூபமான கிராமிய இலக்கியம். அதனல் தான் தமிழ்ப் பெருமக்களின் இதயத்திலே இடம் பிடிக்க, அதற்கு இத்தனை காலம் போலும்!

1941-இல் வெளிவந்த இந்நாவலை, நான் ஒரு சிறிய இதிகாசமாகவே (Minor clasic) கருதுகிறேன். கடந்த கால் நூற்ருண்டுக் காலத்திய தமிழ் நாவல்களில், ஒரு தலைசிறந்த படைப்பாக மதிக்கிறேன். - -

நான் இந்த முடிவுக்கு எப்படி வந்தேன் என்பதை விளக்க வேண்டுமல்லவா?

என் உரையை, கதை-கட்டுக்கோப்பு-நடை என்ற மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறேன். -