பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 so

கதை

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, மின்சார ஒளி பரவாத கோவை மாவட்டச் சிற்றுார் ஒன்றிலே, கதை நிகழ் கிறது.

கொங்குச் சீமையிலே சிவியார் பாளையம் என்ற சிற்றுார். அங்கு சின்னப்பன் குடும்பமும் மிகச் சிறியது தான்.

சின்னப்பன், அவன் மனைவி ராமாயி, அண்ணி நாகம் மாள், அவளது குழந்தை முத்தாயா ஆகிய நால்வரே அந்த விவசாயக் குடும்ப உறுப்பினர்கள்.

நாகம்மாளின் கணவன், சில ஆண்டுகளுக்கு முன்பு, உடம்பிலே வாணம்பட்டு இறந்து விடுகிருன். அன்று முதல், தானே குடும்பத் தலைவியாக இருந்து, எல்லாக் காரி யங்களையும் கவனித்து வருகிருள் நாகம்மாள், ! -

எனினும், கடந்த ஒராண்டாகவே அவள் நெஞ்சில் பிரி வினை எண்ணம் முளைவிடத் தொடங்கிவிட்டது. இதற்குக் காரணம், சின்னப்பனின் மாமியார் காளியம்மாளும், அவ் வூரிலுள்ள எதிர்க்கட்சியும்தான்.

அக்கிராமத்தில் இரு கட்சிகள். சின்னப்பனும் அவனது. உறவுக்காரரும் ஒரு கட்சி, மணியக்கார ராமசாமிக் கவுண் டரும், அவரது மந்திரிப் பிரதானிகளும், அடியாட்களும் மற் ருெரு கட்சி.

இந்தக் கட்சி விவகாரம், முந்திய தலைமுறையில்." துவங்கியது. அன்று சின்னப்பனின் தத்தை ராமசாமி கவுண்டர்தான் ஊரிலே என்ன சச்சரவு நடந்தாலும் பஞ்சா யத்துச் செய்வார். இன்றைய மணியக்காரரின் தந்தையான அன்றைய மணியக்காரருக்கு அது பிடிக்கவில்லை. எனவே பொய்க் கேஸ்கள், அபராதங்கள். குட்டிக் கலவரங்கள் இப் படியாகப் பகைவளர்ந்தது.