பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

? &

நாளாவட்டத்தில் சின்னப்பனின் கை இளைக்க, மணியக் காரரின் கை வலுக்கிறது.

இந்நிலையைக் கண்டு அஞ்சி, தன் மகள் ராமாயியையும், மருமகன் சின்னப்பனேயும் தன் வீட்டோடு குடியேற்ற விரும் புகிருள், காளியம்மாள். அவள் மருமகனின் நிலத்தை விற்க முனைகிருள்; ஆனல், குடும்பத் தலைவியான நாகம்மா ளின் எதிர்காலத்தில் அக்கறை காட்டவில்லை.

ஒரு நாள் காளியம்மாள் தனது அந்தரங்கத்தைப் பொது மனிதன்போல் சின்னப்பன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த கெட்டியப்பனிடம் கூறுகிருள். அவன் அதை மணியக்கார ரிடம் கூற, மணியக்காரரும், அவரது மந்திரி நாராயண முதலியும் கெட்டியப்பனைத் துருப்புச் சீட்டாகப் பயன் படுத்தி, சின்னப்பன் குடும்பத்தைச் சீரழிக்கத் திட்டமிடு கின்றனர்.

கெட்டியப்பன், அந்தக் கிராமத்துப் போக்கிரி. குடி யிலும் தீனியிலும் சொத்து அனைத்தையும் தீர்த்துவிட்டு, மதயானைபோல் வாழ்பவன்.

இந்த முரடன்மீது இப்போது நாகம்மாளுக்கு ஒரு அலாதி அபிமானம். அவனது இருப்பிடம் சென்று, பண்டம் பலகாரங்களைக் கொடுத்து, குடும்பப் பிரச்னைகளை அலசு கிருள்.

கெட்டியப்பன், பாகப்பிரிவினைக்காகச் சண்டை போடும் படி, நாகம்மாளிடம் உருவேற்றுகிருன். மணியக்காரரும், அவரது மந்திரியும் தமது மகத்தான ஆதரவைத் தெரிவிக் கின்றனர்; நேரடி நடவடிக்கைக்குத் தூண்டுகின்றனர்.

அவர்களது திட்டம், மிகப் பயங்கரமானது. முதலில் சின்னப்பன் குடும்பத்தைப் பிளந்து, பரம்பரைப் பகையைத் தீர்த்துக் கொள்வது; பின்னர், நாகம்மாளின் நிலத்தை மெல்ல அபகரித்துக் கொள்வது. அதாவது, பறவையைக்

நா-5