பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

கூண்டிலிருந்து விடுவிக்கும் பாவனையில், அதன் இறக்கைகளை நறுக்கிக் கொல்வது!...

ஆணவம், ஆத்திரம், அவநம்பிக்கை, துர்ப்போதனை ஆகியவற்றுக்கு இரையான நாகம்மாள், ஒரு நாள் சின்னப் பனிடம் பங்கைக் கேட்கிருள்.

ஒஹோ, பங்கு வேணுமா? செரி. எந்தக் காமாட்டிப் பயெ கேக்கச் சொன்னனே அவனெ வரச்சொல்’’ என்று ஒரே போடாகப் போட்டு விடுகிருன், அவன்.

நாகம்மாள் கப்சிப்பென அடங்கிவிட்டாள். ఆఅత சல்லியர்களும், சகுனிகளும் அவளை விடவில்லை. பிரிவினை வெறியை மூட்டிக்கொண்டே இருக்கின்றனர்.

ஒரு நாள் மைத்துனனின் மரணச் சேதி வருகிறது. சின்னபயன் தன் மனைவியுடன் மாமியார் வீடு செல்கிருன், இந்த நல்வாய்ப்பை "மும்மூர்த்தி'களும் பயன்படுத்திக் கொண்டு, சின்னப்பன் வீட்டிலே விருந்துண்டு, நாகம்மா ளின் கலக்கத்தைத் தெளிவிக்கின்றனர். அவள் இதயத் திலே பிரிவினைப்பேய் ஓயாது கூத்தாடுகிறது! -

சின்னப்பன் ஊர் திரும்பியதும். நாகம்மாள் ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்கிருள். அதாவது, அந்தக் குடும் பத்தையும் தனது குழந்தையையும் விட்டுப் பிரிந்து, மணியக் காரர் வீட்டில் குடியேறி விடுகிருள்! .

மணியக்காரர் அவளை வீடு திரும்பச் சொல்கிரு.ர்.

நா அந்தப் பக்கம் தலெ வெச்சுப் படுக்க மாட்டே அவர்கள் கொளமரத்தைத் தெரிந்த பிற்பாடு, அங்கு இருக்க லாமா? உங்களெநா நம்பினே. நீங்க எப்பிடி உட்டாலும் சரி. என்று பிடிவாதமாகப் பேசுகிருள், நாகம்மாள்.

மணியக்காரர் குழுவுக்குக் கொண்டாட்டமாகி விடு கிறது ! -