பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፳5

நாளேக் காலையில் ஏற்றம் இறைக்கச் சின்னப்பன் வருவான். அப்போது நீ அவனைத் தடுத்து நிறுத்தவேண்டும். விவகாரம் வரும்போது, அக்கம்பக்கத்தாருடன் சென்று நாம் பஞ்சாயத்துச் செய்யவேண்டும்’ ’ என்று மந்திரி முதலி யார் யோசனை சொல்ல, அனைவருக்கும் திருப்தி ஏற்படு கிறது. -

மறுநாள் காலையில், சின்னப்பன் தோட்டத்துக்கு ஏற்றம் இறைக்க வரும்போது, நாகம்மாள் அப்படியே செய்து விடுகிருள் !

'உங் கையெக் காலெ முறுச்சிருப்பே; எனக்கு வந்த கோவத்தை அடக்கீட்டே ஓடிப் போ, என் முன்னலே நிக்காதே!' என்று உறுமுகிருன் சின்னப்பன்.

என்ன? நான ஒடறது? என் தலே துண்டாத்தாம்

போவட்டுமே!’ என்ருள் நாகமாம்ள்.

அவ்வளவு தைர்யமா உனக்கு அப்படீன இன்னக்கி அடிதடிக்கினே ஆளுகளயும் வரச் சொல்லி இருக்கிறயா? ஒரு கை பாத்துட்டுத்தாம் போக உத்தேசமா?' என்று சீறு

கிருன், சின்னப்பன்.

அச்சமயம் கெட்டியப்பனும், அவனது நண்பன் செங்காளியும் மூக்கு முட்டக் குடித்துவிட்டு, கையில் தடி யுடன் நாகம்மாளின் துணைக்கு வருகின்றனர்.

சின்னப்பன் கடுங்கோபத்தோடு அவர்களை வைகிருன்.

ஆத்திரமுற்ற கெட்டியப்பன், கைத்தடியால் அவன் மண்டையில் ஓங்கி அறைந்து விடுகிருன் கைத்தடி சின்ன பின்னமாக முறிகிறது. -

இரத்த வெள்ளத்தில் கிடக்கும் சின்னப்பனின் உயிர் பிரிகிறது. குழந்தை முத்தாயா கீச்செனக் கத்தி, ராமாயியைத் தழுவுகிறது; அவள் ஹோவெனக் கதறிக் கொண்டு கணவன்மேல் விழுகிருள். . * × -