பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

இதுதான் கதை. காதல் நிகழ்ச்சிகளோ, கிளர்ச்சி பூட்டும் சம்பவங்களோ இல்லாத இந்தக் கதையை வைத்துக் கொண்டு, ஒர் அருமையான நாவலை எழுதியிருக்கிருர், ஆர். ஷண்முக சுந்தரம். . . . . . . .

ஆர்ப்பாட்டமில்லாத கதைப் போக்கு உயிர்த் துடிப் புள்ள பாத்திரப் படைப்பு: தெள்ளத் தெளிந்த சொல் லாட்சி-இவையே இந்நாவலின் சிறப்பியல்புகள்.

பாத்திரப் படைப்பு

இந்நாவலின் பாத்திரப் படைப்பைச் சற்று நோக்கு வோம். - . . .

நாகம்மாள், சின்னப்பன், ராமாயி, முத்தாயா, காளி யம்மாள், கெட்டியப்பன், மணியக்கார ராமசாமிக் கவுண்டர், மந்திரி நாராயண முதலி ஆகியோர் இந் நாவ வின் முக்கிய பாத்திரங்கள். இவர்களின் ஒரு சிலரை யேனும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். - நாகம்மாளே எடுத்துக் கொள்வோம். கதாநாயகி யான அவள், இந் நாவலில் 17 அத்தியாயங்களில் நடமாடு

முதல் அத்தியாயத்திலேயே வெங்கமேட்டுச் சந்தை யிலிருந்து, மாலையில் வீடு திரும்பும் பெண்களுடன் நாம் அவளைச் சந்திக்கிருேம். அப்பொழுது ஆசிரியர் எழுது கிருர்: - - - ਾਂ

எறும்புச் சாரை போல் அவர்கள் போகும் தினுசு வெகு அழகாயிருந்தது. அப்போது மணியடித்தது போல, ஒரு குரல் எழுந்தது. முன்பின் போகிற பத்து முப்பது பேரும் கப்பென்று பேச்சை விட்டனர். - : - நா எல்லா வாங்கியும் ஒண்ணெ மறந்திட்டேனே!" என்று கணிரெனும் ஒரு குரல் எழுந்தது. ‘. . . . . . . . . .