பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 7

'யார் இந்த வெண்கலத் தொண்டையில் பேசியது? பெண்ணுக்கா பிரமன் இவ்விதமான குரல் மகிமையை அளித்தான்? இந்தப் பெண் நாகம்மாள், கணவன் இறப்ப தற்குப் பத்து வருஷத்திற்கு முன்பிருந்தே ஒரு ராணி' போலவே நடந்து வந்திருக்கிருளென்றும், பிறருக்கு அடங்கி நடக்கும் பணிவும் பயமும் என்னவென்றே அவள் அறிய மாட்டாளென்றும் இப்போது குறிப்பிட்டாலே போதும்.' என்று நாகம்மாளை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிருர் ஆசிரியர். (பக்கம் 7)

ராணியைப்போல் கர்வங்கொண்ட நா கம்மாள். சின்னப்பனின் மனைவி ராமாயியை அதட்டி அதிகாரம் செய்கிருள்; ஆளுல், மாரியம்மன் உற்சவத்தின்போது, ஏழை எளியவர்களைத் துன்புறுத்தும் கெட்டியப்பனின் அட்டகாசங்களை ரசித்து மகிழுகிருள்; அவனிடம் பேசிச் சிரிக்கிருள்; பூஜை முடிந்து எல்லோரும் வீடு திரும்பும் போது, கோவிலுக்குப் பின்புறத்தில் கெட்டியப்பனுக்கு மடியிலிருந்து என்னவோ எடுத்துக் கொடுக்கிருள்!

நாகம்மாள்-கெட்டியப்பன் நட்பு சின்னப்பனுக்கும் ராமாயிக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் மனத்துக்குள் குமுறு கிருர்கள். இக் குமுறல் நாகம்மாளுக்கும் தெரிந்து விடு கிறது. எனவே, வீட்டிலும் விவசாய வேலைகளிலும் அவளது சண்டித்தனம் அதிகரிக்கிறது. . . . .

ஒரு நாள் தோட்டத்தில் எள் விதைப்பு: சின்னப்பன் உழுது கொண்டிருக்கிருன்; சந்தேகமும் வெறுப்பும் குமிழி யிட, நாகம்மாள் கூடையிலிருந்து எள்ளைக் குத்துத் குத்தாக வாரி இறைக்கிருள்! - - * - - -- -

நண்பகலில் வரப்போரத்தில் உட்கார்ந்து கசப்புடன் சிந்திக்கிருள்: "இந்த மாதிரிக் கானலிலும் காற்றிலும் உழைத்து என்ன பயன்? ஏன் இப்படி இவர்களுடன் ஒட்டுக் குடியாக வாழ வேண்டும்? இந்தப் பரந்து கிடக்கும் காட்டி லும் தோட்டத்திலும் என் கணவனுக்குச் சேரவேண்டிய