பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

பாகம் பாதி இல்லையா? நானும் என் குழந்தையும் ஏன் சுகமாகக் காலத்தைக் கழித்துக்கொண்டு போகக் கூடாது? என் குழந்தைக்கு அழகான சிலை, ஒரு நகை நட்டு பண்ணிப் போட்டுப் பார்த்தால் எப்படி இருக்கும்? மாதத்திற்கு நாலு பேருக்குக் குறையாமல் அவர்களுக்கு வேண்டியவர்கள் சொந்தம் பாராட்டிக் கொண்டு வந்து விடுகிரு.ர்கள். இதெல் லாம் யார் சம்பாதித்தது?' என்று பொருமுகிருள் நாகம் LÖTT GYf. -

"நல்லதோ, கெட்டதோ எதுவும் இப்படித்தான். ஒரு சிறு வித்து எப்படிப் பிஞ்சும் பூவும் குலுங்கும் விருட்சமாகி அதன் நிழலிலேயே எத்தனையோ ஜீவராசிகளுக்குக் குளிர்ந்த நிழலைத் தருகிறதோ, அந்த மாதிரி இந்தச் சிறு கனல் பொறியும், மகாப் பெரிய அனல் மலையை வளர்க்க லாயிற்று' (பக்கம் 32)

பாகப் பிரிவினை என்ற விஷவித்து, நாகம்மாளின் மதியைக் கெடுக்கிறது; மானத்தை அழிக்கிறது; இறுதியிலே சின்னப்பனின் உயிரையும் பறித்து, அந்தக் குடும்பத்தையே சிதைத்து விடுகிறது. --

நாகம்மாளின் மனப் போராட்டங்களையும் அவளுள்ளே. விசுவரூபமெடுக்கும் அசுரப் பண்புகளையும், எதிரிகளின் சதி வலையிலே அவள் சிக்குவதையும் தலையாய இலக்கியத் திறனுடன் சித்திரிக்கிருர் ஆர். ஷண்முக சுந்தரம்.

நாகம்மாளுக்கு அடுத்தபடியாக, நம்மை ஈர்ப்பவன் கெட்டியப்பன். இவன் 11 அத்தியாயங்களில் வருகிருன், மூன்ரும் அத்தியாயத்தில்-மாரியம்மன் உற்சவ காலத்தில் - அவனை இவ்வாறு அறிமுகப் படுத்துகிருர் ஆசிரியர் :

'ஜல்ஜல்' என்று சதங்கைகள் ஒலிக்க, கம்புத்தைச், சுற்றிச் சிறியவர்களும் பெரியவர்களும் ஆடிக் கொண்டிருந் தார்கள். அந்த ஆட்டக்காரர்களிலே ஒருவன் அடிக்கடி பறையர்கள் அடிப்பதைக் குற்றம் குறை சொல்லி வந்தான்,