பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

அதிகாரம் தொனிக்கும் குரல், உயரத்திற்கேற்ற பருமன்; உருட்டிக் கட்டின வேஷ்டி, சரியான தலைக்கட்டு. அவனேக் கண்டுகூட இருப்பவர்கள் சந்தோஷம் கொள்வதும், அவன் அதட்டும்போது கொல்லென்று சிரிப்பதுமாயிருந்தார்கள். அவன்தான் கெட்டியப்பன். அவனுக்குக் குடிப்பதற்குப் பணம் எப்படிக் கிடைக்கிறது? ஏதாவது மந்திரம் தந்திரம் கற்று வைத்திருக்கிருளு: அதெல்லாம் ஒன்றுமில்லை. தனக்கு இருந்த காடொன்றையும் தொலைத்து விட்டான். அவன் வேறு ஒன்றும் செய்யவில்லை; இட்லியும் கள்ளும் அந்தக் காட்டை விலைக்கு வாங்கிவிட்டது! இப்போது வெறும் ஆள். அந்த விடுசூளே யாருக்கும் பயப்பட மாட்டான். ஊரில் எல்லோரும் அவனே ஒரு மாதிரியாகத்தான் நடத்து வார்கள். அவனிடம் பகைத்துக் கொண்டால் போச்சு; அன்றைக்கு விரோதித்துக் கொண்டவனுக்கு வாழைத் தோட்டமிருந்தால், பத்துப் பன்னிரண்டு தாராவது பிஞ்சோடும் பூவோடும் அறுபட்டுப் போய்விடும். அல்லது தென்னந் தோப்பு உள்ளவராயிருந்தால், இருபது முப்பது குலேயாவது பாளைக் குருத்தோடு காணுமல் போயிருக்கும் அவனிடம் தன்னைப் போன்ற நாலைந்து ஆட்களும் உண்டு. ’’ (பக்கம் 15)

இப்படிப்பட்ட மனிதனிடம்’ ’தான் நாகம்மாள் அன்பு செலுத்துகிருள்; அடிக்கடி ஆலோசனை கேட்கிருள்! இந்நிலையில் அவள் தலைமை தாங்கும் குடும்பத்தின் கதி என்னவாகும்? நீங்களே ஊகித்துக் கொள்ளளலாம்.

மணியக்கார ராமசாமிக் கவுண்டரையும், அவரது மந்திரி நாராயண முதலியையும் பார்ப்போம் :

'மணியக்கார ராமசாமிக் கவுண்டர் நல்ல பாரா சாரி யான ஆள். கருவேலங்கட்டை மாதிரி அவரது காலும் கையும் உறுதியாயிருக்கும். அவரது நிறமும் கருஞ்சாந்து போலத்தான். கிருதா மீசைக்கும் அவரது மேனிக்கும் வித்தியாசமே தெரியாது. அவரது முறுக்கு மீசையில்