பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& O

எலுமிச்சங் கனியை நிறுத்தலாம்! என்ன நிறுத்தியே காண்பித்திருக்கிருர்!

'தன் தகப்பனர் காலத்தில் தோல்வி மேல் தோல்வி யானலும், தாளுவது வெற்றி கண்டுவிட வேண்டும், சின்னப்பனையும் அவன் பங்காளிகளேயும் பிரித்து மட்டம் தட்டவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தார், மணியக்காரர். இதில் அநேகமாக வெற்றியும் அடைந்து விட்டார். இப்போது சின்னப்பனை என்ன செய்தாலும் கேள்வியில்லை. அதற்குத் தகுந்தாற்போல் நாகம்மாள் சங்கதி வேறு கிடைத்திருக்கிறது.

- எப்போதும் மணியக்காரருக்கு யோசனை சொல்வ தற்கு அநேக மந்திரிகள் உண்டு, அவர்களில் முதன்மை யானவர் நாராயண முதலி. இவன் ஒரு புளுகுணி, குண்டுப் புரட்டன். எங்கு என்ன நடந்தாலும் துளி விடாது வந்து சொல்வி விடுவான். இதற்கு இப்படிச் செய்ய வேண்டும்; அவர்கள் சங்கதி அப்படி அது இது என்றெல்லாம் யோசனை சொல்வான். மற்றவர் யோசனையானுல் மணியக்காரர் நிராகரித்து விடுவார்; நாராயணசாமி முதலி விஷயம் அப்படியல்ல. எங்கே கல்லெறிஞ்சால் எப்படி விழும் என்று தெரிஞ்சவன். சாதாரணமாகப் கோர்ட்டு விஷயங்களில் அபாரத் திறமை. மற்றும் சாட்சிக்குச் செல்லும்போது, சாப்பிடுவதற்கு எந்த ஒட்டலுக்குப் போனல் ரொம்ப திவ்ய மாயிருக்கும், குறிப்பிட்ட மனிதர்களே எங்கு அழைத்துச் செல்வது என்பதெல்லாம் மனப்பாடம் (பக்கம் 72) என்று மணியக்காரரையும், அவரது மந்திரியையும் நமக்கு அறி முகப் படுத்துகிருர், ஆசிரியர். -

ஏனைய பாத்திரங்களின் குணநலன்களை வாசகர்களே படித்து அநுபவிக்க வேண்டியதுதான் f