பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 :

நடை

ஆர். ஷண்முகசுந்தரத்தின் தமிழ் நடைக்குச் சில உதாரணங்கள் : - г

'அடை மழைக் காலம் வந்து சேர்ந்தது. புரட்டாசி கழிந்து ஐப்பசி ஆரம்பம். வான வீதியில் எந்நேரமும் சாயை படிந்து கருமுகில்கள் கவிழ்ந்த வண்ணம் இருந்தன. திடீரென்று மழை கொட்டும். அடுத்த கணமே கம்மென நின்றுவிடும். எதையோ நினைத்துக் கொண்டதைப்போல மறுபடியும் சோவெனத் துளிக்கும். இப்படிப் பெய்யும் மழையைப் பார்க்கும்போது யாரோ ஒரு தாய், தன் வாவிப மகனைப் பறி கொடுத்ததை எண்ணி ஏக்கத்தால், பலபல' வென்று நின்று நின்று கண்ணிர் விடுவதைப் போலிருந்தது.

இங்ங்ணம் அடை மழை சொல்லாமல் கொள்ளாமல் வந்தாலும் பட்டிதொட்டிக்குப் போகிறவர்கள் நிற்கவே யில்லை. ஒலைக் குடைகளையோ, பனந்தடுக்குகளையோ அல்லது கோணிப் பைகளையோ போட்டுக்கொண்டு தங்குதடை யின்றி அவரவர் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர். வயது வந்த கிராமச் சிறுமிகள் ஆடைகளைச் சரியாகக்கூட மார்பில் போடாமல் சில்லிட்ட சாரலில் இட்டேறித் தடத் தில் செல்லும் காட்சியே காட்சி! ஆட்டு மந்தைகளின் பின்னலோ, வேலி யோரங்களிலோ, காட்டின் நடுவிலோ அவர்கள் செல்லுவதைப் பார்த்தால், எங்கோ மாய உலகத்திலிருந்து வந்த மதன மோகினிகள் திரிந்து கொண் டிருப்பதைப் போலிருக்கும்!'" (பக்கம் 65). -

'முலாம் பூசிக்கொண்டிருந்த இயற்கை, தன் அழகுக் கதிர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அடக்கிற்று. மரங்கள் உச்சியிலும், வீட்டுக் கூரையிலும் படிந்திருந்த தங்க நிறம், மெதுவாக மறைந்தது. இரவு தன் நீண்ட கரும்போர் வையை விரித்தது. இரவின் சாந்த மடியிலே பகதி ஜாதி கள் தலை சாய்த்தன. அந்த அமைதியான வேளையில்