பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&2

சித்திரப் பாலை போன்று நாகம்மாள் அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு சருகின் அசைப்புக்கும் சட்டெனத் திரும்புவாள்' சிறு காற்றில் ஒலேகள் படபடக்கும்போது செருப்புச் சத்தம் என்று எண்ணி ஏமாறுவாள். அர்த்தமற்ற சத்தம் ஹோ" என எழும், திடுக்கிட்டுத் தலை நிமிர்வாள். கெட்டியப்பன் முன்னல் வந்திருக்கப்படாதா என்று சலித்துக் கொள் வாள். (பக்கம் 1.06)

ஆர். ஷண்முகசுந்தரத்தின் தமிழ் நடையை எளிய, இனிய, உணர்ச்சிகரமான தமிழ்நடை என்று சொன்னல் போதாது; அழகிய அற்புதமான தமிழ் வசனம் என்றும் கூறவேண்டும். இத்தகைய தமிழ்நடை கைவரப்பெற்ற அவர் ஒரு பாக்கியசாலி என்று சொல்லலாம் அல்லவா?

மற்ருெரு விஷயம்; முக்கியமான விஷயம்; இந்நாவலின் உரையாடல்கள் எல்லாம் கொங்கு மண்ணின் மணம் கமழும் பேச்சுத் தமிழில் அமைந்துள்ளன. அவற்றைப் புரிந்து கொள்வதில் சிரமமேயில்லை. நமக்கு அது ஒர் இன் அநுபவமாகவே இருக்கிறது. -

இத்தகைய கொச்சைத் தமிழ் நடை இந் நாவலின் தனிச் சிறப்பு என்றே கூறவேண்டும்.

இலக்கியத்தில் ೧ಹrಕಣಕ್' என்ற பிரச்னைக்கு வெகு அழகாகத் தீர்வு கண்டிருக்கிருர், ஆர். ஷண்முக சுந்தரம்.

கடைசியாக இந்நாவல் எழுதப் பெற்ற காலத்தையும் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும். o -

1941-మ, இரண்டாம் மகாயுத்த காலத்தில், இந் நாவல் வெளிவந்துள்ளது. х .

இது உலக அரங்கில் பாசிஸ் எதிர்ப்புப் போர் நிகழ்ந்த காலம்: 'வெள்ளையனே வெளியேறு!’ என்று நமது தேச

விடுதலை இயக்கம் பொங்கி எழுந்த காலம்.