பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

இந்தக் கால கட்டத்தில் மணிக்கொடி பரம்பரையைச் சேர்ந்த ஒருவரால் இந்நாவல் எழுதப்படுகிறது.

இந்நாவல் மனிதனின் எழுச்சியைப் பாடவில்லை; வீழ்ச்சி யைப் பாடுகிறது.

நமது கிராம மக்களின் பலவீனங்களே மறைக்கவில்லை; யதார்த்த நிலையைக் கீறிப் பிளந்து காட்டுகிறது.

இந் நாவலில் நன்மை வெற்றி பெறவில்லை; தீமை முடி சூட்டிக் கொள்கிறது; சதியும், சூழ்ச்சியும். வன்முறை களும் அரசோச்சுகின்றன. இது தேச பக்தியைத் தட்டி எழுப்பும் கதையல்ல; தேசத்தில் புரையோடிப்போன புண்ணை, ஜனசமூகத்துக்குக் காட்டும் ஜன்னல்!

இந் நாவல் வெளிவந்த சமயத்தில், மணிக்கொடி’க் காரர்களான புதுமைப்பித்தன், கு. ப. ராஜகோபாலன், பி. எஸ். ராமையா, சிட்டி, சிதம்பர சுப்ரமண்யம், சி. சு. செல்லப்பா, மெளனி, பிச்சமூர்த்தி, லா. ச. ராமா மிருதம், எம். வி. வெங்கட்ராம் ஆகியோர் நாவல்கள் எழுதியதாகத் தெரியவில்லை.

கந்தர்வ வாழ்க்கை என்ற பெயரில் ராஷ்டிரவாணி' யில் கி. ரா. வின் நாவல் ஒன்று வந்ததாக நினைவு.

- நாகம்மாளுக்கு முன்பாக பசி என்ற புதுமையான நாவலே, தனி மனிதனின் தத்துவக் கொந்தளிப்பைப் பிரதி பலிக்கும் நாவலை, சோதனை உணர்வுடன் க. நா. சுப்ர மண்யம் எழுதியிருந்தார். அதை அவரது பெரிய படைப் பின் ஒரு பகுதியென்றுதான் சொல்ல வேண்டும்.

'பசி ஒரு தனித்தன்மையான நாவல் என்ருல், அதை யடுத்து வெளிவந்த நாகம்மாளும் மற்ருெரு புதுமையான தனித்தன்மையான, முழுமையான நாவல். காலஞ்சென்ற கு. ப. ராஜகோபாலனின் பாராட்டைபெற்ற நாவல். அவர் இந் நாவலுக்கு ஒரு அரிய முன்னுரை எழுதியிருந்தார்.