பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

பெருமிதத்தை உண்டாக்குவன. பிறநாட்டார் பழந்தமிழ் நூல்களில் ஆர்வம் கொண்டு பயிலும்போது தமிழர்கள் பின்னும் அன்போடு பயிலவேண்டும். தமிழ்த் துறையில் பணிபுரிவோரும் பயில்வோரும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நூல்களை ஆழமாக ஆராய்கிறார்கள்.ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்புக் கிடைப்பதில்லை. வாழ்க்கையில் வெவ்வேறு துறையில் ஈடுபட்டவர்களுக்கும்,தமிழல்லாத பிறதுறைகளில் பயிற்சி பெறும் மாணாக்கர்களுக்கும் எல்லா நூல்களையும் பயில்வதென்பது இயலாத காரியம், என்றாலும் தமிழில் என்னதான் இருக்கிறதென்று தெரிந்து கொண்டால் உதவியாக இருக்கும். தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு என்று வெறும் பெயர்களைச் சொல்லிக் கொண்டு பெருமையடிப்பதைவிட, பழைய தமிழ் நூல்களைப் பற்றிச் சுருக்கமாக ஓரளவு தெரிந்திருப்பது நல்லது. ஆராய்ச்சித் துறையில் ஈடுபடும் மாணாக்கர்கள் கூட முதலில் இவ்வாறு பொதுவகையில் தமிழ் இலக்கியங் களைப் பற்றிப் பிழம்பாகத் தெரிந்து வைத்திருப்பது

பயன் தரும். -

இந்தக் கருத்தை மனத்தில் கொண்டே, 'அறிமுகம்” என்ற தலைப்பில் தமிழ் நூல்களைப் பற்றித் தனித்தனியே சுருக்கமாகத் தெரிவிக்கும் கட்டுரைகளை 'மஞ்சரி'யில்’ எழுதத் தொடங்கினேன். அந்தக் கட்டுரைகள்ைப் படித்த பலர் அவை பயனுடையனவாக இருக்கின்றன என்றனர். மாணாக்கர்கள் படித்துப் பாராட்டினர். புத்தக வடிவில் வந்தால் எப்போதும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பலர் கூறினர்; எழுதினர் பலர். . . . . . . . . . . .

அவர்கள் விருப்பத்தை அறிந்துகொண்டு. இந்த நூலை வெளியிடுகிறேன். 'தமிழ் நூல் அறிமுகம்' என்று சற்று விளக்கமான பெயரை இந்த நூலுக்கு வைத்தேன்.

தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை பதினெண் கீழ்க்கணக்கு என்னும் நூல்களைப்பற்றிய