பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. தமிழ் பயிற்றும் முறை

பார்த்தலாகும். இயைபுபடுத்திக் கண்டவற்றை மிகச் சுருக்கமாகக் கூறுதலே பொதுவிதிகாண்டலாகும். இவ்வாறு கண்ட பொது விதியை மீண்டும் படிப்பில் கையாண்டு பயிற்சி பெறுதலே விதியை .ெ ச ய ற் ப டு த் த லாகும். இந்த ஐந்து விதிகளும் உளவியலின் அடிப் படையில் அமைந்தவை. இவ்வாறு ஹெர்பார்ட் உள வியலில் தான் கண்டறிந்த உண்மைகளே வகுப்பறையில் கையாளுவதற்கு வகை செய்தார்.

ஃபிராபெல்: ஹெர்பார்ட்டிற்குப் பிறகு கல்வி உலகில் தலைசிறந்து திகழ்ந்தவர் ஃபிரைடரிச் ஃபிராபெல்(கி.பி.1782 -1852) என்பார். அவர், இயற்கை அன்னேயும் மனிதனும் ஒன்ருக இருந்துகொண்டு இறைவனுடைய திருவுளத்தை வெளிப்படுத்துகின்றனர் என்று நம்பினர். எனவே, குழந் தைகளின் ஆற்றல்கள் மலர்ச்சியடைதல் இறைவன் திருவுளக்குறிப்புப்படி நிறைவேறுவதால் அவை தவருகா என்று நம்பிஞர். ஆகவே, இயற்கையையொட்டி கல்வி கற்பித்தல் நடைபெறவேண்டுமென்பது அவர் கருத்தாகும். அவர் கொள்கைப்படி பள்ளிஎன்பது குழந்தைகளின் பூங்கா ; பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகள் பூங்கா வில் வளரும் செடிகள் ; குழந்தைகளைக் கண்காணிக்கும் ஆசிரியர் செடிகளைப் பாதுகாக்கும் தோட்டக்காரன். எனவே, கற்கும் குழந்தைகள் தாமாகச் செயற்பட்டும், கருத் துக்களைத் தாமாக வெளியிட்டும் வளர்ச்சி எய்தவேண்டும் என்பது ஃபிராபெலின் விருப்பமாகும். அவற்றை அவர் பாட்டுக்கள் வாயிலாகவும், படைப்பாற்றலின் துணை கொண்டும் எய்துவிக்கலாமென்று கருதினர்.

மாண்டிஸாரி : இத்தாலி நாட்டைச் சார்ந்த மாண்டி லாரி அம்மையாரும் (கி. பி. 1870-1952) ஃபிராபெல் என்ற அறிஞரைப் போலவே குழந்தைகளை வளரும் செடிகளாகவே கருதினர். குழந்தைகளின் புலன்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களேக் கூர்த்த மதியினராக்கலாம் என்று அவர் கருதினர்; அக்கருத்தைச் செயல்முறையிலும் மெய்ப்பித்துக் காட்டிப் பெரும்புகழ் பெற்ருர், இன்று