பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தமிழ் பயிற்றும் முறை

அமைந்த மூலதனம் என்றும் அவர் கூறுகின்ருர், கற்றலில் அடங்கிய படித்தல், எழுதுதல், கணக்கிடுதல் ஆகிய மூன்று செயல்களும் மேற்கூறிய பண்புகளே யொட்டி அமைய வேண்டுமென்பது அவருடைய கொள்கை. கல்வித் துறையில் தான் எழுதிய நூல்களிலும் இதே கருத்தைத் தான் அவர் மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறுகின்குர்.

மேற்கூறிய கருத்துக்களை ஒருங்கே வைத்துச் சிந்தித் தால் கல்வி முறை இரண்டு பிரிவுகளில் அடங்கும் என்பது தெரியவரும். ஒன்று அகநிலையை ஒட்டியது; இன்னுென்று புறநிலையைத் தழுவியது: ஒன்று உளவியலே அடிப் படையாகக் கொண்டது , இன்குென்று சமூக இயலச் சார்ந்தது. சிலர் அகநிலைக் கல்வியே சிறந்தது என்றும், சிலர் புறநிலைக் கல்வியே உயர்ந்தது என்றும் கூறுகின் றனர். அகநிலக் கல்வியை வற்புறுத்துகின்றவர் உள்ளத் தின் வளர்ச்சியை முக்கியமாகக் கொள்கின்றனர். புறநிலைக் கல்வியை விரும்புகின்றவர் வெளியுலக அறிவிற்குச் சிறப்புத் தருகின்றனர். கூர்த்து ஆராய்ந்தால் உண்மை இரண்டு எல்லைகளுக்கும் இடைப்பட்டது என்பது தெரிய வரும். இதைக் கப்பல் கட்டும் தொழிலில் காணும் பிரச்சினே களோடு ஒப்பிடலாம். ஒரு சாரார் ஏற்றிச் செல்லும் பொருளுக்கேற்றவாறு திட்டமிட்டுக் கப்பலேக் கட்ட வேண்டுமென்று கூறுவர். பிறிதொரு சாரார் கப்பலைத் திண்மையாகவும் விரைவாகச் செல்லக்கூடியதாகவும் கட்டி விட்டால் விரும்பிய பொருள்களே யெல்லாம் அதில் ஏற்றிச் செல்லலாம் என்று சொல்லுவர். அறிவுடையோர் இந்த இருசாரார் கருத்துக்களேயும் ஏற்றப்பெற்றி எடுத்துக் கொண்டு செயலில் இறங்குவர். எனவே, கல்வி கற்பித் தலிலும் அகநிலைக் கல்வியையும் புறநிலைக் கல்வியையும் தேவைக்கேற்ற அளவு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது தெரியவரும். .

இங்ஙனம் பல அறிஞர்கள் கல்வித் துறையில் சிந்தித்ததின் விளைவாகப் பல கற்பிக்கும் முறைகள்