பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(1) 101

அவர்களின் பின்னுேக்கத்தையும் (backward look) ஒன்றுபடுத்திக் காட்டுகின்றது. குழந்தைகளின் விளையாட்டுக்கள் குடிவழிப் பிண்புகளையும் புலப்படுத்துகின்றன ; குமரப்பருவ வேலைகளுக்கு ஆயத்தம் செய்வனவாகவும் உள்ளன.

வேலையும் விளையாட்டும் : வேலையையும் விளையாட் டையும் வேறுபடுத்திக் காட்டுவதென்பது எளிதன்று ; அவற்றிற்கு விளக்கந் தருவதும் கடினமே. வேலே வாழ் வடன் இணைந்த ஒரு புறம்பான செய்கை : ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தேவையை வேலே முற்றுவிக்கின்றது; ஆல்ை, விளையாட்டில் புறம்பான நோக்கமொன்றும் இல்லை ; அஃது ஒருவருடைய மகிழ்ச்சியின் பொருட்டே மேற்கொள்ளப் பெறுகின்றது. வேலை மகிழ்ச்சியுடன் விரும்பி ஏற்றுக்கொள் -ளப்படுவதில்லை ; விளையாட்டு மகிழ்ச்சியுடன் விரும்பி ஏற் றுக்கொள்ளப்படுன்றது. வேலையின் பயனைக் கண்ட பிறகுதான் மகிழ்ச்சி உண்டங்கின்றது; விளையாட்டில் ஈடுபட்டிருக் கும்பொழுதே மகிழ்ச்சி ஏற்படுகின்றது. வேலே பல புறம்பான கட்டுப்பாடுகளால் மேற்கொள்ளப்படுவது; விளையாட் டில் பல கட்டுப்பாடுகள் இருப்பினும் அவை விளையாடுபவர் களே ஏற்படுத்திக் கொண்டவை. வேலை உண்மை வாழ்வை ஒட்டியது ; விளையாட்டு பாவனே உலகைச் சார்ந்தது. இவ்வாறு ஒன்றை யொன்று பிரித்தறியலாம் எனினும், அடிப்படையான உண்மை ஒன்று உண்டு. அந்த வேறு பாடுகள் யாவும் செயல்களில் இல்லை; அவற்றில் ஈடுபடுபவர்களின் மனப்பான்மையைப் (Attitude) பொறுத்திருக் கின்றது. எத்தொழிலையும் நாமே ஏற்று மகிழ்ச்சியுடன் ஆற்றத் தொடங்கினல், அஃது ஒரு பளுவாகத் தோன்றுவ தில்லை; அத்தொழிலை மேற்கொள்ளும்பொழுது நம் இயல்பூக்கங்கள் திருப்தியடைந்தால், அது நமக்கு விளையாட் டாகவே தோன்றும். எனவேதான் உலகில் நடைபெறும் செயல்களனைத்தையும் ஆண்டவன், அலகிலா விளையாட் டாகச் செய்து வருகின்ருன் என்ற உண்மையையும் இலக் கியங்களில் காண்கின்ருேம்,