பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 G4 தமிழ் பயிற்றும் முறை

பதிலாக அவர்கள் கவனம் துணைக் கருவிகளிலும், படங்களிலும் பிறவற்றிலும் சிதறிப்போக இடமுண்டு. பாடங்களில் தொடர்ச்சி அற்றுப் போகவும் கூடும். எல்லா ஆசிரியர்களும் இம்முறையைக் கையாளும் திறமையுடையவர்கள் என்று சொல்ல இயலாது.

விளையாட்டு முறையில் தமிழ் கற்பித்தல் : தொடக்கநிலை, இடைநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்பித்தலில் விளையாட்டு முறையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை ஈண்டு ஒரு சிறிது கவனிப்போம். அவற்றைக் கருத்துடனும் நம்பிக்கையுடனும் திறமையுடனும் கையாண்டால் நல்ல பயனை எதிர்பார்க்கலாம்.

தொடக்க நிலைப் பள்ளிகளுக்கு ஏற்ற விளையாட்டுக்கள் :

(1) ஒரு வகுப்பை இரு சமமாகப் பிரித்துக்கொள்க; ஒரு பிரிவுக் குழந்தைகளிடம் சில சொற்கள் எழுதப் பெற்ற affsirs’īrū’sol_3&rush (Flash cards) இன்னுெரு பிரிவிலுள்ளவர்களிடம் அச்சொற்கள் குறிக்கும் படங்கள் எழுதிய மின் னட்டைகளையும் கொடுத்திடுக. ஆசிரியர் ஒரு பொருளைக் குறிப்பிட்டு அழைத்தால் அப்பொருளின் பெயர் எழுதியுள்ள அட்டையை வைத்துக்கொண்டிருக்கும் குழந்தையும் அப் பொருளின் படம் எழுதியுள்ள அட்டையை வைத்துக் கொண்டிருக்கும் குழந்தையும் சேர்ந்து வந்து ஆசிரியர் பக்கத்தில் வகுப்பை நோக்கி நிற்க வேண்டும். இம்மாதிரி தொடர்ந்து நடத்துக.

(2) பல பொருள்களின் உருவங்களடங்கிய ஒரு பெரிய படத்தைக் குழந்தைகளிடம் கொடுத்து அப்படத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தில் தொடங்கும் பொருள்களின் பெயர்களை எழுதச் செய்யலாம்.

(3) ஒரு பலகை அல்லது கெட்டியான அட்டையில் பல சொற்கள் அல்லது எழுத்துக்களைப் படுக்கை வரிசை யாக எழுதுக. ஒவ்வொரு சொல் அல்லது எழுத்திற்குக் கீழே