பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள் (2) 重35

போய்விட்டால், அவன் வகுப்புமுறைக் கல்வியால் விடுபட்ட பகுதியைக் கற்க இயலாது. நடுநிலை மாணுக்கருக்குரிய கல்வித் திட்டமும் பாட வேளேப்பட்டியும் (Time table) ஏனைய இரு நிலை மாணுக்கர்களுக்கும் ஒத்து வராததால் வகுப்பில் அவர்களிடம் குறும்பு, சோம்பல், முயற்சிக் குறைவு, கல்வியில் கவனக்குறைவு முதலிய கெட்ட பழக்கங்கள் பெருகி வகுப்பு ஆட்சிக்குத் தடையாகவும் இருக்கும்.

தனிப் பயிற்சி முறையை மேற்கொள்ளும் வழி : மேற். கூறிய குறைகளே நீக்குவதற்காகவே தனிப்பயிற்சி முறை மேற்கொள்ளப் பெறுகின்றது. இதில் மாணுக்கர்கள் விருப்பப்படி விரைவாகவோ மெதுவாகவோ கற்கும் வாய்ப்புக்கள் உள்ளன ; மாணுக்கர்களும் தாமாகவே கற்கும் வாய்ப்பினேப் பெறுகின்றனர். பள்ளியில் கற்கவேண்டிய அனைத்தும் இம்முறையில் கற்க இயலாது போகலாம். ஆனல் பெரும்பகுதிகளே இம்முறையில் கற்க இயலும். ஒப்படைப்புக்களின் (Assignments) துணையால் இம்முறையை நல்ல போக்கில் கொண்டுசெலுத்தலாம். ஆண்டின் தொடக்கத்தில் ஒவ்வொரு மாணுக்கனிடமும் ஒப்படைப்புக்களின் அட்டையும் ஆசிரியரிடம் ஒப்படைப்பு விளக்க அட்டையும் இருக்க வேண்டும். தமிழாசிரியர் ஒரு வகுப்பில் ஒர் ஆண்டில் கற்பிக்க வேண்டிய பாடங்களைப் பல சிறு பிரிவுகளாகவும் ஒவ்வொரு சிறு பிரிவையும் பல உட்பிரிவுகளாகவும் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு உட்பிரிவிற்கும் தனித்தனி ஒப்படைப்புத் தாள்கள் தயாரித்துக் கொள்ளவேண்டும்.

ஆண்டின் தொடக்கத்தில் ஆசிரியர் முதல் ஒப்படைப் புத்தாளே மாணுக்கர்களிடம் கொடுத்து, கொடுத்த தேதியைத் தன்னிடமுள்ள ஒப்படைப்பு விளக்க அட்டையில் மாணுக்கர்களின் பெயருக்கு நேராகக் குறித்துக்கொள்ள வேண்டும். சிலர் ஒப்படைப்புக்களே விரைவில் முடித்து விடக்கூடும். அவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திராமல் இரண்டாவது ஒப்படைப்புத் தாளைப் பயன்படுத்த