பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்.(2) 1 45

படும். இம்மாதிரியான பயிற்சிகள் சில பாடப் புத்தகங்களில் காணப்பெறுகின்றன. இவற்ருல் மாணுக்கர்களின் தன் முயற்சி தூண்டப்பெறும் ; வாய்க்குட்படிக்கும் பழக்கமும் நன்கு வளரும்.

இத் திட்டத்தின் கிறைகள் : இத் திட்டத்தில் ஒவ்வொரு மானுக்கனும் தனக்குரிய வேகத்தில் கற்கின்ருன், மாணுக்கர்கள் பொறுப்புடன் கற்பதால் உண்மையான தேர்ச்சியை அடையமுடிகின்றது. இங்கு மாணுக்கர்களே தன் முயற்சியால் கற்பதால், அவர்களிடம் நல்ல பயிற்சி ஏற்படுகின்றது ; புத்தகங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகின்றது. தத்தம் தேவைக்கேற்ருற்போல் சில பாடங்களில் அதிகக் கவனத்தையும், சிலவற்றில் குறைந்த கவனத்தையும் செலுத்த முடிகின்றது. இங்குப்பெறும் தன்முயற்சி, பொறுப்பு, பட்டறிவு முதலிய பண்புகள் பிற்கால வாழ்க்கைக்குப் பயன்படும். எதிர்பாராத காரணங்களால் ஒரு மாணுக்கன் பள்ளிக்கு வர இயலாவிடில், அதல்ை பெருங்கேடு ஒன்றும் விளைவதில்லை ; வந்த பிறகு அவன் விட்ட இடத்தில் தொடங்கிப் படிக்கும் வாய்ப்பு இங்கு உள்ளது. வகுப்பு மாற்றம் இங்கு இல்லாததால், எல்லோரும் படித்து முன்னேற முடிகின்றது. ஒருவருடைய காலமும் முயற்சியும் இங்கு வீணுவதில்லை. வீட்டு-வேலையின் (Home-work) கட்டாயம் இங்கில்லை; ஆதலால் மாணுக்கர்கள் தாம் அதைச் செய்ய வில்லையே என்று அஞ்சத் தேவையில்லே. ஒழுங்கு முறைபற்றிய பிரச்சினேகளே இங்கு எழுவதில்லை ; வெறுப்பு, சலிப்பு, கட்டாயம், அச்சம் முதலியவை இங்கு இராததால் ஒழுங்கு முறை தாகை நன்கு அமைந்து விடுகின்றது. ஆசிரியர்கள் மாணுக்கர்களைத் தனித்தனியாக நன்கு அறியும் வாய்ப்பு உள்ளது ; சுதந்திரம் மிக்கிருப்பதால் மாணுக்கர் ஆசிரியரை அடிக்கடி நெருங்கிப் பழகி ஐயங்களே அகற்றிக்கொள்ள முடிகின்றது. ஆசிரியர் மாணுக்கரின் நண்பராகவும், வழிகாட்டியாகவும், நெறியாளராகவும் இருந்து மாணுக்கர்களை நன்னெறிகளில் கொண்டுசெலுத்த முடிகின்றது. இம் முறையில் கையாளப்பெறும், தேர்ச்சி

த-11