பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தமிழ் பயிற்றும் முறை

கருதினர் : குழந்தைகளின் பிறப்பிலேயே அவர்களின் பிற்கால வாழ்விற்கு வேண்டிய அனைத்தும் மறைந்த நிலையில் அமைந்துள்ளன என்பது அம்மையாரின் கோட்பாடு. அவ்வாறு மறைந்து கிடக்கும் ஆற்றல் மலர்ச்சி யுறுவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்வதுதான் ஆசிரியரது பணியாகும் ; அவை இயல்பாக மலர்வதற்கு வேண்டிய சூழ்நிலையை மட்டிலும் தான் ஆசிரியர் செய்ய வேண்டும் ; குழந்தைகளே எச்செயலிலும் கட்டாயப்படுத்தக் கூடாது ; அவர்களுக்கு முழு உரிமை தர வேண்டும் ; எவ்விதத்திலும் அவர்களைக் கடியக் கூடாது. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொருவிதமாக இருக்கும் ; அதனுடைய தனிவீறை எவ்விதத்திலும் சிதைக்கக் கூடாது ; அதைச் சிதைக்கக்கூடிய வகுப்பு முறைக் கற்பித்தலே மேற்கொள்ளக் கூடாது. குழந்தை தாகைக் கற்கவேண்டும் என்றும் ஆசிரியர் அடிக்கடி அதில் தலையிடுதல் கேடுபயக்கும் என்றும் அம்மையார் கருதுகின்ருர். ஒவ்வொரு குழந்தை கற்பதிலும் ஒவ்வொரு விதமாக விரைவின் அளவு இருத்தல் கூடும்; விரைவு கருதி ஆசிரியர் அவர்களாகக் கற்பதில் தலையிடக் கூடாது. இம்முறையில் கற்பதற்கு ஆசிரியர் தேவையில்லை; ஆனல் குழந்தைகள் தம்மைத்தாமே சரியான முறையில் கொண்டுசெலுத்தும் ஆற்றலைப் பெருதிருப்பதால், அவர்களுக்கென அறிவூட்டத்தக்க துணைக்eÉ(537 (Didactic apparatus) 595ërs om 5 assoir-s55gisirsirrif; குழந்தைகள் செய்யும் தவறுகள் அவற்ருல் தாமாகவே களையப்பெற்று விடும். தாமாகக் கற்கும் கல்விதான் உண்மையான கல்வியாகும் என்பது அம்மையாரின் நம்பிக்கை. இளங்குழந்தைகளுக்குத் தசைகளின் இயக்கத்-- திற்கும் வாய்ப்பு அளிக்கவேண்டும் என்பதை அம்மையார் முக்கியமாகக் கருதுகின்ருர் ; இப் பயிற்சியால் குழந்தைகள் தம்மைத் தாமே கவனித்துக்கொள்ளும் ஆற்றலைப் பெறுவர் என்றும், எழுதுதல், நடத்தல், ஓடுதல் முதலிய செயல்கள் நல்ல முறையில் அமையும் என்றும் நம்புகின் ருர். எல்லாவற்றிற்கும் மேலாகக் குழந்தைகளுக்குப் புலன்வாயிலாகக் கல்வி புகட்டுவதையே முக்கியமாகக் கொள்ளுகின்ருர்.