பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

复56 தமிழ் பயிற்றும் முறை

படிப்பில் மன ஒருமைப்பாடு அமையுமா ? செல்வந்தர்கள் வீடுகளில் வசதிகள் இருப்பினும் வானுெலியின் இரைச்சல், அடிக்கடி பல அலுவல்கள் குறுக்கிடுதல், வீடுகளில் உள்ளோர் அடிக்கடி படக் காட்சிகள் களியாட்டங்கள் முதலியவற்றிற்குப் போதல் போன்றவை மானுக்கரின் படிப்புக்குப் பெருந் தடைகளாக உள்ளன.

படிக்கும் பழக்கங்கள் : ஒரோவழி வசதிகள் இருந்து வீட்டில் அவர்கள் படித்தாலும் வீட்டுப் படிப்பு கெட்டபடிப்புப் பழக்கங்களை உண்டுபண்ணி விடுகின்றது. இன்றைய மாணுக்கர்களிடம் குறித்த காலத்தில் படிக்கும் பழக்கம் இல்லை ; சிலர் மனம் போனவாறு ஒரு திட்டமின்றிப் படிக்கின்றனர். தேர்வுக் காலங்களில் சிலர் தேநீர் பருகி நள்ளிரவுவரை படிப்பதையும், உணவுக்கு முன்னும் உணவுக்குப் பின்னும் படிப்பதையும், சிலர் தூக்கத்திலிருந்து எழுந்து நள்ளிரவில் படித்து அதிகாலையில் தூங்குவதையும், சிலர் படிப்பைத் திடீரென்று நிறுத்தி விட்டு நண்பர்களுடன் படக் காட்சிகளுக்கும் கேளிக்கைகளுக்கும் செல்வதையும், படிக்கும்பொழுது பெற்ருேர்கள் பல வீட்டு அலுவல்களைக் கவனிக்கும்படி கூறுவதையும் நாம் காணத்தான் செய்கின்ருேம். கல்வி என்பது பல்வேறு திறன்களடங்கிய ஒரு சிக்கலான செயல் என்றும், அவ்வாறு படிக்குந் திறன் மனிதருக்கு மனிதர் மாறுபடும் என்றும் ஆராய்ச்சிமூலம் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஒரு சில கருத்துக்கள் வாய்க்குட் படிப்பைப்பற்றிக் கூறும்பொழுது குறிப்பிடப் பெற்றுள்ளன. அவற்றை ஆண்டுக் கண்டு கொள்க.

சரியானமுறையில் வழிகாட்டாமை : நமது நாட்டில் பெரும்பாலான குடும்பங்களில் படிப்பில் சரியான முறையில் வழிகாட்டுவதற்குத் தக்கவர்கள் இல்லை. பெரும்பாலான பெற்ருேர் படித்தவர்களாகவும் இல்லை ; படித்த ஒரு சிலரும் தக்க முறையில் மேற்பார்க்கும் தகுதியும் ஆற்றலும் பயிற்சியும் இல்லாதவர்களாக உள்ளனர். அதனுல் பெரும்பாலான மாணுக்கர்கள் தவருண முறைகளே மேற்கொள்வ.