பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 தமிழ் பயிற்றும் முறை

யர் முனையவேண்டுமேயன்றி அவர்கட்கு மொழியறிவு இன்னும் வளரவில்லை என்று எண்ணி அவர்களே வாளாவிடுதல் தவருகும் ; முறையிலுள்ள குறையை யறியாது விளைவில் குறை கூறுவதில் பயன் இல்லை. -

நல்ல விளுக்களின் பண்புகள் : நல்ல விளுக்களின் பண்புகள் யாவை என ஒரு சிறிது ஆராய்வோம். விளுக்கள் சொற் சுருக்கமானவையாகவும், தெளிவாகவும், விளக்கமாகவும் இருத்தல் வேண்டும் ; வினுக்களில் கையாளப்பெறும் மொழி எவ்விதத்திலும் ஐயத்தை விளேவித்தல்கூடாது. விளுக்கள் மாணுக்கர்களின் கவனத்தை ஈர்த்து, நினைவாற்றலையும் சிந்தனையையும் தூண்டும்படியாக அமையவேண்டும். உத்தேச விடையை ஏற்பனவாகவும், ஆம் அல்லது இல்லை’ என்ற விடையைமட்டிலும் ஏற்பனவாகவும் இருத்தல் கூடாது. வினுக்கள் மானுக்கரின் வயதினே யொட்டியும் அறிவு நிலையை யொட்டியும் இருத்தல் வேண்டும். திறமையுடைய ஆசிரியராக இருந்தால் அவற்றை அனுசரித்து விளுக்களை ஆயத்தம் செய்வார். மிகத் தெளிவாகவும் எளிதாகவும் உள்ள விடையை வருவிக்கக்கூடிய விளுக்களைத் தவிர்த்தல் வேண்டும். அம்மாதிரியே விடைகளைக் காண்பதிலும் கடினமாகவுள்ள விளுக்களைத் தவிர்த்தல் வேண்டும். இந்த இரண்டுவகை வினுக்களாலும் வகுப்பு நேரம் கொன்னே கழிவதைத் தவிர வேருெரு பயனும் இராது. தெளிவற்ற விளுக்களாலும் பயன் இல்லை. அவை மாணுக்கர்களே ஏதாவது விடையிறுக்கச் செய்துப் பாடப் போக்கையே மாற்றிவிடும். இவ்வாறு வீணுன வினுக் களே விடுத்துச் சுற்றி வளைத்துப் பாடத்திற்கு வருவதை விட, நேராகப் பாடத்தில் இறங்குவது மேலாகும். வைணவ சமயம்பற்றிய ஒரு தோத்திரப்பாடலைக் கற்பிக்க எண்ணும் ஆசிரியர் தீர்த்தம்’ என்ற ஒரு சொல்லே மாளுக்கரிடமிருந்து வருவிக்க எண்ணி நீங்கள் பெருமாள் கோவிலுக்குப் போயிருக்கின்றீர்களா? அங்கு என்ன கொடுப்பார்கள் ? என்று இரண்டாம் படிவ மாணுக்கர்களே