பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தமிழ் பயிற்றும் முறை

வகுப்பிலுள்ள பலர் விடையிறுப்பதில் பங்கு பெறச் செய்யவேண்டும். ஒரு சில நிறைமதியினரையே விடையிறுக்கச் செய்வதால் குறைமதியினர் பாடத்தில் பங்கு கொள்ளாது போகக் கூடும். ஒரு குறிப்பிட்ட வரிசையில் விளுக்களே விடுத்தலும் தவறு ; அவ்வாறு செய்வதால் ஒரு சில மாணுக்கர் விளுக்கள் செல்லும் போக்கையும் அவை தமக்கு வரும் நேரத்தையும் அறிந்துகொண்டு அதுவரை கவன. மின்றி வாளா இருத்தல்கூடும். சிந்தனேக்கு வேலைதரும் வினுக்களே விடுக்கும்பொழுது விடைகளைப்பற்றி யோசிக்க மானுக்கருக்குக் காலம் தரப் பெறுதல்வேண்டும். இவ்வாறு காலந் தருவது வினவப்படும் மாணுக்கனையும் விடையின் தன்மையையும் பொறுத்தது. சிலர் விரைவாகப் பதிலிறுக்கக் கூடும் ; சிலர் தாமதமாகப் பதில் தரக்கூடும். சில விடைகள் எளிதாகக் காணக்கூடியவை ; சில சிந்தித்து அறியக்கூடியவை. ஒரு மாணக்கன் விடையிறுக்க இயலாதபொழுது ஆசிரியர் காலத்தை வீணுக்காது அடுத்தவனேயோ வேறு ஒருவனேயோ விடையிறுக்கும்படி செய்யவேண்டும். இவ்விடத்தில் வேறு சில எளிய விளுக்களால் அம்மாளுக்கனேச் சிந்திக்கச் செய்து பிறகு அவனேயே விடையிறுக்கும்படியும் செய்யலாம். ஆளுல், வகுப்பு முறையில் கற்பிக்கும்பொழுது எவ்வளவு நலன் விளைந்தாலும் ஒருவனே எண்ணி இம்மாதிரி காலத்தை வீணுக்குவது முறையன்று. ஒருதடவை விளுவை விடுத்த பிறகு அதை மீண்டும் திரும்பக் கூறுதல் ஆகாது. அவ்வாறு செய்தால் வினு மீண்டும் திரும்பக் கூறப்படும் என்று ஒரு சிலர் கவனமின்றி இருத்தல் கூடும். ஒரு வினவிற்கு மாணுக்கர் விடையிறுக்க இயலாத நிலையினை அறியும்பொழுது விைைவ மாற்றியமைத்து வினவலாம். அல்லது வேறு சில சிறு விளுக்களை விடுத்துச் சிந்தனேயைக் கிளறி. விட்டு மீட்டும் அவ்வினுவிற்கு விடையிறுக்கச் செய்யலாம். ஆளுல், ஒரு தடவை விடுத்த விைைவ அடிக்கடி மாற்றியமைத்தல் கூடாது. அவ்வாறு செய்தல் தவறு. அது மாணுக்கருக்கு மயக்க உணர்ச்சியை உண்டாக்குவதுடன் ஆசிரியரின் ஆயத் தமின்மையையும் காட்டுகின்றது.