பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 1 79

தங்கினை சென்மோ பாண ! தங்காது வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க் கென்றும் அருகா(து) ஈயும் வண்மை உரைசால் நெடுந்தகை ஒம்பும் ஊரே."

மேல் வகுப்பு மானுக்கராக இருப்பினும் இப்பாட்டினே உணர்வது கடினம். எத்தனே முறை அழகாகப் படித்துக் காட்டிலுைம் பாட்டின் கருத்தைப் புரிந்துகொள்ளுதல் சிரமத்தான். இந் நிலையில் பாட்டில் வரும் காட்சியை ஆசிரியர் எளிய இனிய சொற்களால் அழகுற எடுத்துக் கூறி விளக்கம் தந்தால், பாட்டின் பொருள் நன்கு விளக்க மடையும,

ஆசிரியர் இவ்வாறு விளக்கந் தரலாம் : " ஒரு மலே நாட்டில் வேட்டுவன் ஒருவன் வாழ்ந்து வருகின்ருன். * இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை : என்ற பழமொழிக்கு இணங்க, சிறந்த நங்கை ஒருத்தி அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்தமைகின்ருள். இக்காலத்திலிருப்பதுபோல அவர்கள் அக்காலத்தில் பல்லடுக்கு மாளிகையில் வாழவில்லை. காட்டில் வாழும் வேடர்கள் தானே! ஆதலின், இயற்கைக் காட்சிகள் சூழ்ந். துள்ள மலேப்புறத்தில் ஒரு சிறு குடிசையில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் குடிசைக்கு முன்புறம் ஒரு அகன்ற வாசல் : முற்றம். முற்றத்தில் பலாமரம் ஒன்று இருக்கின்றது. அம் மரத்தின்மீது முன்னே என்ற ஒருவகைக் கொடியும் முசுண்டை என்ற மற்ருெருவகைக் கொடியும் பல்கிப் படர்ந்து பந்தல் போட்டாற்போல் காட்சி அளிக்கின்றன. பலாமரத்தில் நன்கு பழுத்துத் திரண்ட பலாக்கனிகள் தொங்குகின்றன. அந்த இயற்கைப் பந்தலின் நீழலில், கதிரவன் கடுமையாகக் காயும் பகல் நேரத்தில், முதல் நாளிரவு யானே வேட்டையாடிய களேப்பால் அவ்வேட்டு. வன் அயர்ந்து உறங்குகின்ருன். வேட்டையின் காரணமாக

  • புறம்-320.