பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置8忍 தமிழ் பயிற்றும் முறை

பெற்றிருக்கும் இக்காலத்தில் கற்பிக்கும் காலத்தையும் ஆற்றலையும் குறைத்துக் கொள்வதற்கு அவை ஓரளவு துணைபுரிகின்றன என்று சொல்லலாம். உளவியற்படியும் அவை விரும்பியேற்கக் கூடியவை. பல புலன்களால் பெறும் அறிவு மாணுக்கரின் மனத்தில் நன்கு பதியும்; மறதியும் ஏற்படாது. ஒரு படம் ஆயிரம் சொற்களுக்கு இணையாகும் என்ற ஒரு சீனப் பழமொழியும் துணைக்கருவிகளின் இன்றியமையாமையை உணர்த்துவதற்காகவே எழுந்தது என்று கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. செயல்முறைக் கல்வியின் நோக்கமும் இதுதான் என்பதும் இவ்விடத்தில் கருதற்பாலது.

கல்வி வரலாற்றை ஆராய்ந்து பார்த்தால் எல்லாக்காலத்திலும் பேராசிரியர்கள் தம் கருத்தை மக்களுக்கு. நன்கு வலியுறுத்துவதற்கு இத்தகைய துணைக்கருவிகளைக் கையாண்டனர் என்பதை அறியலாம். முதல் நூற்ருண்டில் இயேசு பெருமான் புலன்களைக் கவரும் காட்சிப்பொருள்களையும் பிற சாதனங்களையும் தெளிவான விளக்கம் கருதிக் கையாண்டார் என்பதையும், இருண்ட காலத்தில் (Dark ages) வாழ்ந்த சில துறவிகள் தம்முடைய எழுத்தோவியங்களேத் தக்க படங்களால் விளக்கினர் என்பதையும், சில ஆண்டுகள் கழித்து அவற்றைத் தோலில் வரைந்தும் கடவுளர் கோயிலிலுள்ள கற்களில் பொறித்தும் வைத்தனர் என்பதையும் அறிகின்ருேம். மறுமலர்ச்சிக் காலத்தில் (Renaissance) சில பேர்போன கலைஞர்களும் சிற்பிகளும் கண்ணுல் காணவல்ல துணைக்கருவிகளைக் கையாண்டனர். 17-ஆம் நூற்ருண்டில் காமினியஸ் (Comenius) என்பார் கற்பிப்பதில் இத்தகைய துணைக்கருவிகளைப் பயன்படுத்தினர். ஒரு நூற்ருண்டு கழித்து பெஸ்டலாஸ்ஸி என்பார் சில துணைக்கருவிகளைப் பயன். படுத்தியும், கற்கும் மாளுக்கர்களே வெளியிடங்களுக்குக் கூட்டிச் சென்றும் சிறந்த முறையில் கற்பித்தார். இன்று கிண்டர் கார்ட்டன் வகுப்பிலிருந்து கல்லூரி வகுப்புக்கள் வரையிலும் பல்வேறு துணைக்கருவிகள் பல்வேறு வகை