பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 1 98

யாக அமையலாம். வீட்டு-வேலை மேலும் கற்கவேண்டும் என்ற அவாவை எழுப்பக் கூடியதாக இருத்தல் வேண்டும் ; அது வேலையை விளேயாட்டாகப் பாவிக்கும் முறையில் அமைதல் நன்று. ஒருவரைப்பார்த்து அப்படியே எழுதக்கூடிய வீட்டு-வேலையைக் கொடுக்காதிருத்தல் நன்று. வகுப்பில் நடைபெற்ற பாடத்திற்குத் துணையாக வீட்டுவேலே அமையவேண்டுமேiயன்றி, புதிய பாடத்தைக் கற்கும் முறையில் அமையக்கூடாது. சுருக்கமாகவும் மாணுக்கருக்கு எளிமையாகவும் இருந்தால், வீட்டு-வேலையால் நல்ல பயனை எதிர்பார்க்கலாம். வீட்டு-வேலையின் இன்றி. யமையாமையை மாணுக்கர் நன்கு உணரும்படி அமையவேண்டும். முற்போக்குள்ள மாளுக்கர், பிற்போக்குள்ள மானுக்கர், நடுத்தரமான மாணுக்கர் ஆகியோருக்குத் தக்கவாறு வீட்டு-வேலை அமைந்தால் நிறைந்த நற்பயன் விளையும் ; ஒவ்வொருவரும் உற்சாகமாக வேலையில் ஈடுபடுவதுடன், மொழிவளர்ச்சியினேயும் எய்துவர். பயன் நோக்கி மானுக்கர் வீட்டு-வேலையில் ஈடுபடவேண்டுமே யன்றி பரிசில் நோக்கியோ தண்டனையை எண்ணியோ அதில் ஈடுபடக்கூடாது. வீட்டுவேலை, எண்ணத்தை வளர்க்கவேண்டும் ; சிந்தனையைத் தூண்டவேண்டும். இவ்வாறு நல்ல வீட்டு-வேலையின் இலக்கணத்தைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம். எந்த வீட்டு-வேலையாக இருந்தாலும் அது விளையும் பயன், ஈடுபடுவதில் உற்சாகம், குறுகிய காலத்தில் முடியுந்தன்மை, தாமாகச் செய்யக் கூடியவாறு இருத்தல் முதலிய கூறுகளேக் கட்டாயம் கொண்டிருத்தல் வேண்டும்.

ஆசிரியருக்குக் குறிப்புக்கள் : எளிமையான, மாணுக்கரின் அறிவுநிலைக்கேற்ற வீட்டு-வேலையை ஆழ்ந்து சிந்தித்து ஆயத்தம் செய்யவேண்டும். பிற பாடஆசிரியர்களுடனும் தலைமையாசிரியருடனும் கலந்து ஆலோசித்து வீட்டுவேலேயின் அளவை அறுதியிட்ட பிறகுதான் மாணுக்கர்கட்கு வீட்டுவேலையைத் தருதல்வேண்டும். கூடியவரை தேவையுள்ளவற்றையே வீட்டு-வேலையாகத் தருதல்

த-14