பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 94 தமிழ் பயிற்றும் முறை

வேண்டும். வீட்டு-வேலையை எவ்வளவுக் கெவ்வளவு குறைவாகக் கொடுக்கக் கூடுமோ, அவ்வளவுக்கவ்வளவு குறைத்துக் கொடுத்தால்தான் நற்பயனே எதிர்பார்க்கலாம். பத்து வயதுக்குக் குறைந்த மாணுக்கர்கட்கு வீட்டுவேலேயே தரக்கூடாது ; பொழுதுபோக்கான முறையில் விளேயாட்டுணர்ச்சியைத் துண்டக்கூடிய ஒரு சிலவகை வேலைகளே அவர்கட்கு வீட்டு-வேலேயாகத் தரலாம். அவை உடலுழைப்பைத் தழுவியிருந்தால் நன்று ; கூடியவரை உடல் இயக்கத்தை ஒட்டியிருந்தால் அவ்வேலையை இளஞ் சிருர் மகிழ்வுடன் ஏற்பர். பதினுெரு வயதிலிருந்து பதின் மூன்று வயது முடியவுள்ள மாணுக்கர்கட்கு, (நடுநிலைப்பள்ளி மாணுக்கர்கட்கு,) ஒன்றிலிருந்து ஒன்றரை மணி நேரத்திற்குள் முடிக்கக் கூடியவற்றை வீட்டு-வேலையாகத் தரலாம். உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களில் பயிலும் மாணுக்கர்கட்கு இரண்டிலிருந்து மூன்றுமணி நேரத்திற்குள் முடியுமாறு வீட்டுவேலையை அளவுபடுத்தித் தருதல் வேண்டும். என்ருலும், வேலையின் தன்மை, கவர்ச்சிகர. மான பண்பு, பயன்படும் நிலை, மாணுக்கர்களின் திறன் ஆகியவற்றை மனத்திற்கொண்டுதான் வீட்டு-வேலையின் அளவினே அறுதியிடுதல் வேண்டும்.