பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தமிழ் பயிற்றும் முறை

குழந்தைகட்கு எழுத்துப் பயிற்சிகள் தருவதிலும் பார்த்து எழுதுதல், அச்சிட்ட பயிற்சிப் புத்தகங்களில் எழு துதல், சொல்லுவதெழுதுதல் போன்ற முறைகள் தொடக்க நிஆலயில் மேற்கொள்ளப்பெறுகின்றன, இந்நிலையில் இயன்ற வரை எழுத்துப் பிழைகள் தவிர்க்கப்பெறுகின்றன. மானுக் கர்கள் ஒரளவு நல்ல திறன்களைப் பெற்றதும் மொழிப் பயிற்சி கள் தரப்பெறுகின்றன. இவற்றில் கீழ்வகுப்பிலிருந்து மேல் வகுப்புவரைப் பல்வேறு பயிற்சிகள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைப் பயிற்சி தொடங்கப் பெறுகின்றது. மொழிப் பயிற்சியும் கட்டுரைப் பயிற்சியும் இணைந்தே நடைபெறுகின்றன. எழுத்தின் ஆற்றல் எல்லே யற்றது. மாணுக்கர் பெறும் மொழித் திறன்கள் யாவும் அவர்களே எழுத்துமொழியில் திறன் அடைவதில் கொண்டு: செலுத்துகின்றன.

படிக்குந்தோறும் புதுப்புதுச் சுவையைத் தோற்றுவிக் கும் நூல்களே இலக்கியங்கள். இந்த இலக்கியங்கள் கவிதை இலக்கியம், உரை நடை இலக்கியம் என இருவகைப்படும். கவிதை இலக்கியம் தமிழ் மொழியின் தனிச்சிறப்பு. உரை நடைச்செல்வம் தமிழில் பண்டு அதிகம் இல்லையெனினும், இன்று பல துறைகளில் பல்கிப் பெருகி வருகின்றது. இந்த இருவகை இலக்கியங்களைப் பயிலும் நோக்கத்திற் கேற்பப் பயிற்று முறைகளும் மாறுபடுகின்றன. இலக்கணம் என்பது, மொழியின் இயக்கத்தைப் பலவிதிகளாகப் பாகுபடுத்திக் கூறுவது. மாணுக்கரின் அறிவு நிலையையொட்டி இலக் கியம், இலக்கணம் ஆகியவற்றைப் பயிற்றுவதற்குப் பல்வேறு முறைகள் உள்ளன.

மேற்கூறியவை யாவும் இந்தப் பிரிவில் ஏழு இயல்களில் விரிவாக விளக்கம் பெறுகின்றன.