பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 207

தாலாட்டுப் பாடல்களைச் சொல்லித் தாலாட்டி உறங்க வைப்பதையும் காண்கின்ருேம். குழந்தைகள் சந்தத்தாலும் இசையாலும் கவரப்படுகின்றனர். ஆசிரியர்கள் இவ்வுண்மையை அறிந்து தம்மிடம் வரும் சிருர்களுக்குச் சுவையுள்ள பாடல்களைக் கற்பித்தால் குழந்தைகள் படிப்பை விரும்பிக் கற்பர். பாடல்களைப் பல்முறை பயில்வதால் குழந்தைகளுக்கு நல்ல வாய்மொழிப் பயிற்சி ஏற்படுகின்றது.

கைவி சம்மா கைவிசு

கைவி சம்மா கைவிசு கடைக்குப் போகலாம் கைவிசு

கண்ணுல் பார்க்கலாம் கைவீசு சொக்காய் வாங்கலாம் கைவீசு

சொகுசாய்ப் போடலாம் கைவீசு பொம்மை வாங்கலாம் கைவீசு

பொட்டு வைக்கலாம் கைவீசு வேடிக்கைப் பார்க்கலாம் கைவீசு

விளையாடப் போகலாம் கைவிசு கோயிலுக்குப் போகலாம் கைவீசு

கும்பிட்டு வரலாம் கைவீசு,

என்ற பாட்டு முதல் வகுப்புக் குழந்தைகளுக்கு ஏற்றது. இதை அபிநயத்துடன் பாடச்செய்தால் குழந்தைகள் விருப்பத்துடன் பாடுவர். கதைப் பாடல்களில் குழந்தைகளுக்கு விருப்பம் அதிகமிருக்கும். தேசிக விநாயகம் பிள்ளையவர்களின் ஊகமுள்ள காகம்’, ‘அப்பம் திருடிய எலி’, ‘நெற்பானையும் எலியும்’ போன்ற பாட்டுக்கள் இளஞ் சிருர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் 1; அவர்களும் உற்சாகத்துடன் அவற்றைக் கற்பர். குழந்தைகளின் வாய்மொழிப் பயிற்சிக்கு இவை பெரிதும்

இவற்றை மலரும் மாலேயும் என்ற கவிதைத் தொகுதிகயில் காண்க.