பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 2i 1

யான முறையில் கையாண்டால், நிறைந்த பயனே எதிர்பார்க்கலாம்.

குழந்தைகள் கதை சொல்லும் முறை : பிறர் சொன்ன கதைகளேக் குழந்தைகள் சொந்த நடையில் சொல்லும் வாய்ப்புக்களைப் பெற்ருல் சிறந்த வாய்மொழிப் பயிற்சி உண்டாகும். சொன்னதைத் திரும்பச் சொல்லுவதில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம் உண்டு ; அதுவே அவர்களின் இயல்பும் ஆகும். எனவே, கூறியது கூறல் அவர்கள் வாக்கில் அமையலாம். ஒவ்வொரு கதையையும் தனித்தனியாகவும் சொல்லச் செய்யலாம் : கூட்டு முறையிலும் சொல்லச் செய்யலாம். கூட்டு முறையில் சொல்லும்பொழுது கதையிலுள்ள பல பகுதிகளில் ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரும் தொடர்ச்சியாகச் சொல்லவேண்டும். தொடக்க நிலையில் ஆசிரியர் கையாண்ட சொற்களேயே குழந்தைகளும் மேற்கொண்டால் மொழிப்பயிற்சி சிறப்புற அமையும். குழந்தைகள் கதை சொல்லும்பொழுது அவர்களுடைய குரல் இடத்திற்கேற்ற ஏற்றத் தாழ்வுகளுடனும், நல்ல உச்சரிப்புடனும், தெளிவுடனும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். குழந்தைகள் சொல்லும்பொழுதே இடை இடையே ஆசிரியர் தலையிட்டுத் திருத்துவதை நீக்கவேண்டும்; அவர்கள் சிந்தனைப் போக்கினே அறுத்துவிடக் கூடாது. தொடக்க நிலையில் கதை சொல்லுவதில் இயல்பான தெளிவு, உற்சாகம், உயிரோட்டம் முதலிய பண்புகள்தாம் முக்கியம் ; மொழித்திறனே நாளடைவில் உண்டாகும்படி செய்து விடலாம்.

குழந்தைகளேக் கதை சொல்லச் செய்வதில் ஆசிரியர் பல முறைகளைக் கையாளலாம். ஆசிரியர் ஒரு கதையைத் தொடங்கி, சிறிது சொல்லி, குழந்தைகளே அதை முடிக்குமாறு ஏவலாம். தொடக்கத்தில் அது கடினமாக இருக்கக்கூடும் ; போகப்போக அஃது எளிதாகும். ஆசிரியர் ஒரு கதையின் தொடக்கத்தையும், இறுதியையும் கரும்பலகையில் எழுதிக்காட்டிக் கதையை நிறைவு செய்யும்படி