பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 321 3

துடன் தெளிவான பேச்சு, இயல்பான நடை முதலியவைகளும் கைவரப்பெறும். கதைகளின் மூலமாக ஒழுக்கம் வளர்வதற்கும் இடம் உண்டு. கதை சொல்லுதல் இயல்பான ஆசிரியர்-மாணுக்கர் கூட்டுறவை வளர்க்கின்றது. பள்ளி வாழ்க்கைக்கே கதைசொல்லுதல் புத்துயிர் அளிப்பதுடன் கல்வியில் வெறுப்பும் ஆசிரியர்களிடம் பகையும் கொண்டுள்ளவர்களே விருப்புடனும் நட்புடனும் இருக்குமாறும் செய்து விடும். கதைகள் பயனுள்ள பொழுது போக்காக உதவுவதுடன் தாய்மொழிப் பற்றையும், நல்லமொழி நடையில் விருப்பத்தையும் ஊட்டத் துணைபுரியும். மக்களிடத்தும் இதர உயிர்ப் பிராணிகளிடத்தும் அன்பும் கருணையும் உண்டாகக் கதைகள் துணைசெய்யும்.

குழந்தைகளுக்குரிய கதைகள் : குழந்தைகளுக்குத் தேர்ந்தெடுக்கப் பெறும் கதைகள் குழந்தைகளின் வயது, மனவளர்ச்சி, பட்டறிவு, அறிவு முதலியவற்றிற்கு ஏற்றனவாக இருத்தல் வேண்டும். கதைகள் செயல்களும் நிகழ்ச்சிகளும் மலிந்தும், உரையாடல்களுக்குகந்தவைகளாகவும் இருத்தல் நன்று. கூறியது கூறல், மிகைபடக் கூறல் முதலிய குறைகள் அதிகமாக இருக்கலாம். திடுக்கிடும் நிகழ்ச்சிகள், எதிர்பாராத நிகழ்ச்சிகள், மனிதன் பட்டறிவில் காணமுடியாத தன்மைகள் ஆகியவை கதைகளில் நிறைந்திருக்கலாம். நடை எளிதாகவும், குழந்தைகளின் அறிவு நிலையை யொட்டியும் இருக்கவேண்டும். அவர்களின் பருவநிலையை யொட்டிக் கதைக்ளின் அளவு அமையவேண்டும். குழந்தைகளின் வாழ்க்கையை யொட்டிய கதைகள்தாம் அவர்கள் மனத்தைக் கவரும் ; உற்சாகம் அளிக்கும். பறவைகள், விலங்குகள், மரஞ்செடிகள் முதலியவை பேசுவனபோல் அமைந்துள்ள கட்டுக் கதைகள் குழந்தைகளுக்கு ஏற்றவை, ஈசோப்பின் கதைகள், பஞ்சதத்திரக் கதைகள் முதலியவை அவ்வினத்தைச் சேர்ந்தவை. சொற்கள் திரும்பத் திரும்ப வரும் குழந்தைக் கதைகளே இளஞ்சிருர் பெரிதும் விரும்புவர். அலாவுத் தீனும் அதிசய விளக்கும்’ என்றதைப் போன்ற பூதங்கள் வரும் கதைகளும்,