பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 2 1 7

தவிர, ஏனைய உயிர்ப் பிராணிகளின் வாழ்க்கை வரலாறுகளேப்பற்றியும் ஓரளவு நன்கு அறிவதற்கு அவை துணைபுரியும். பட்சிகள், மிருகங்கள், தாவரங்கள் ஆகியவை பேசுவனபோல இக் கதைகள் அமைந்திருக்கும். ஈசோப்புக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் ஆகியவற்றை இப்பிரிவினுள் அடக்கலாம். சாதாரண மனிதன் பலவகையான வாழ்க்கைகளேத் துய்க்க வாய்ப்புக்கள் இல்லே ; பட்டறிவில்லாத வாழ்க்கையில் பட்டறிவு எய்துவது கடினம். அப். பட்டறிவை, நன்கு எழுதப்பெற்ற இக்கதைகளின் மூலம் பெறலாம். கதைகளை வருணிக்கும்பொழுது காட்சிகள் அப்படியே மனக்கண்முன் நன்கு தோன்றவேண்டும். * அன்ட்ராகில்ஸும் சிங்கமும் என்ற கதையைக் குழந்தைகள் படிக்கும்பொழுது சிங்கத்தின் நன்றியறிவை அறிவர். அக் கதைகள் பல்வேறு உயிர்ப்பிராணிகளின் வாழ்க்கையில் கருணை கொள்ளவும், அவற்றின் வாழ்க்கை நிலையை உணரவும் வாய்ப்புக்களை நல்கிக் குழந்தைகளிடம் ஒர் உயர்ந்த பண்பாட்டையும் வளர்க்கின்றன.

நகைச்சுவைக் கதைகள் : இத் தலைப்பில் பலவகையான வேடிக்கைக் கதைகளைச் சேர்க்கலாம். அவற்றைப் படிக்கும்பொழுது குழந்தைகள் உற்சாகம் அடைவர் ; மனத்திற்கு மகிழ்ச்சியூட்டவும் உல்லாச மனப்பான்மையை நல்கவும் அவை பெரிதும் பயன்படுகின்றன. சிரிப்பு மனித இனத்திற்கு மட்டிலும் ஏற்பட்டிருக்கும் ஓர் அற்புதப் பண்பு ; நிந்தனையும் விகாரமுமற்ற சிரிப்பு உடலுக்கு நல்லது. மாக்டு கால் கருத்துப்படி நாம் சிரிக்காவிட்டால் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நம்மை அலைக்கழித்து விடும். ஒரு சமயம் சினத்திற்கும், மற்ருெரு சமயம் கருணைக்கும் சிரிப்பு முறிவாக உதவுகின்றது. நகைச்சுவைக் கதைகள் குழந்தைகளுக்குச் சிரிப்பை உண்டாக்கி வாழ்க்கையின் தராதரங்களே உணர்வதற்குத் துணையாக இருக்கின்றன. * பிரதாப முதலியார் சரித்திரம் போன்ற கதைகளில் வரும் சில கதை மாந்தர்களுக்கு நேரிடும் நிகழ்ச்சிகளை இன்று நினேத்தாலும் நாம் வயிறு குலுங்கச் சிரிக்கின்ருேம் ;