பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

233 தமிழ் பயிற்றும் முறை

வரிசையில் பார்வையாளராக வந்து மண்டபத்தில் கூடுவர். பள்ளி ஆசிரியர்கள் ஒரு புறத்தில் அமர்ந்திருப்பர். அமைச்சரவை பொருளே எடுத்து ஆராயும் ; அவர்கள் ஆராய்ச்சியை எல்லோரும் கேட்பர். பார்வையாளர்களுக்கு ஆராய்ச்சியில் கலந்துகொள்ளும் உரிமை இல்லை. தாம் சொல்லவே:ண்டியவற்றை யெல்லாம் முன்னரே வகுப்பு மாணுக்கத் தலைவன் மூலமாக அமைச்சரவைக்குத் தெரிவித்துவிடவேண்டும். ஆண்டு விழாவை நடத்துவதில் பொது மண்டபத்தை அணிசெய்தல், இருக்கை அமைப்பு, நடிக்க வேண்டிய நாடகம், பரிசளிப்பு, அழைப்பிதழ் அச்சிடல், அழைப்பிதழ்களே வெளியார்களுக்கு அனுப்புதல், ஆண்டு அறிக்கை தயாரித்தல் போன்ற செய்திகள் ஒவ்வொன்றும் விரிவாக ஆராயப்பெறும். ஒவ்வொரு அமைச்சருக்கும் விழாவேலே பிரித்துக் கொடுக்கப்பெறும். ஒவ்வொரு வகுப்பிலுமுள்ள மாளுக்கர் குழுக்களின் ஒத்துழைப்பால் ஒவ்வொரு அமைச்சரும் தம் கடமையைத் திறமையாக நிறைவேற்றுவர். இம்மாதிரியாகப் பலரும் அறியும்படி செய்திகளை ஆராய்வதால் எல்லோரும் ஆண்டு விழாவைக் குறித்துச் சிந்திக்க வாய்ப்பு கிடைக்கின்றது; ஆராயும் முறையையும் எல்லோரும் அறிய முடிகின்றது.

8. சொற்போர்

உயர்நிலைப் பள்ளி மாணுக்கர்களுக்கும் கல்லூரி மாளுக்கர்களுக்கும் வாய்மொழிப் பயிற்சி பெறுவதற்குச் சொற்போர் (Debate) சிறந்ததொரு சாதனமாக அமைகின்றது. பல பொருள்களைக்குறித்துச் சொற்போர் நடை. பெறும்பொழுது மாணுக்கர்கள் இருபிரிவாகப் பிரிந்து பொருளே ஒட்டியும் வெட்டியும் பேசுவர். இன்றைய பள்ளி நடைமுறையில் குடிமைப் பயிற்சி ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. இதன் ஆதரவில் பள்ளியில் அமைக்கப்பெற்றுள்ள பள்ளிப் பாராளும் மன்றம் பல சொற்போர்களுக்கு வாய்ப்பினை நல்கும்.